தமிழக அரசின் 2011-12ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 4ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன், இந்த அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
கடந்த 2006 மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., வரும் மே 16ம் தேதியுடன் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், 2011-12ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 4ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.பிப்ரவரி 4ம் தேதி காலை, நிதியமைச்சர் அன்பழகன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 11ம் தேதி, 2011-12ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், அதே நாளில் 2010-11ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், மக்களை கவரும் வகையில் பல்வேறு இலவச திட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நடப்பு ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை, நாளை காலை கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா துவக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக