தொகுதிகள் குறித்து பேச மமக சார்பில் ஐவர்குழு அமைப்பு ஜனவரி இறுதிக்குள் பொதுக்குழு முக்கிய பிரச்சினைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள்
தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் பங்குபெற்ற உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் ஜனவரி-2 அன்று பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு.ரஹ்மத்துல்லா, துணைப்பொதுச் செயலாளர் மவ்லவி.ஜெ.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் கோவை உமர், மௌலா எம்.நாசர், பேரா.ஜெ.ஹாஜாகனி, ஏ.எஸ்.எம்.ஜுனைத், எம்.எச்.ஜிஃப்ரி காசிம், பி.எஸ்.ஹமீது மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குணங்குடி ஆர்.எம்.ஹனீஃபா, ம.ம.க பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, ம.ம.க பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், ம.ம.க துணைப்பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர்கள் மண்டலம் எஸ்.எம்.ஜெய்னுல் ஆபிதீன், முகம்மது கௌஸ், சம்சுதீன் நாசர்உமரி, தலைமைத் தேர்தல் ஆணையர்கள் ஜுல்பிகார், வேதாளை ஹாஜா, சிராஜுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடுகள் குறித்து அதிமுகவுடன் மமக சார்பில் பேச்சு வார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டது. பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான இக்குழுவில் தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி, மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, தமுமுக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, மமக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீது ஆகியோர் பங்கு பெறுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.
ஜனவரி 31-க்குள் மாநில பொதுக் குழுவை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டணி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, ஊழல் மிகவும் மலிந்துள்ள நிலை தமிழகத்தில் நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஊழல் மிகுந்த திமுக ஆட்சியை அகற்ற, மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகித்து வரும் அதிமுக கூட்டணியை மேலும் பலப்படுத்தி, 2011 சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெறப் பாடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
விலைவாசி உயர்வுக்கு கண்டனம்
விஷம்போல் ஏறிவரும் விலைவாசி யால் ஏழை எளியோரின் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது. விலைவாசி உயர்வுக்குக் காரணமான அரசியல் சூதாட்டங்களை அம்பலப்படுத்தும் வகையில் ம.ம.க போராட்டங்களையும், விழிப்புணர்ச்சிப் பிரச்சாரங்களையும் மேற்கொள்வது எனத் தீர்மானிக் கப்படுகிறது.
காவல்துறைக்குக் கண்டனம்
தீவிரவாதிகளைப் பிடிக்கின்ற போலீஸ் பயிற்சியின்போது, திண்டுக்கலில் தீவிரவாதி களை முஸ்லிம்களாக சித்தரித்திருந்தனர். இதை த.மு.மு.க வன்மையாகக் கண்டித்தது. மீண்டும் ஈரோட்டில் நடந்த பயிற்சியின் போதும் தீவிரவாதிகளுக்கு முஸ்லிம் களைப் போலவே செயற்கைத் தோற்றம் கொடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு முஸ்லிம்களைத் தொடர்ந்து புண்படுத்திவரும் காவல்துறையின் அராஜகப் போக்கை தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வது எனவும், அதற்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை எனில் மிகப்பெரிய கண்டனப் போராட்டத்தை நடத்துவது, எனவும் தீர்மானிக் கப்படுகிறது.
இராணுவத்தில் உள்ள கருப்பாடுகளை களையெடுக்க வேண்டும்
காவி பயங்கரவாதத்தின் விபரீதங்களை சமீபத்தில் தோலுரித்துக் காட்டிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் திக்விஜய் சிங் ஆகியோருக்கு இந்நிர்வாகக் குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதே நேரத்தில் காவி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் புலனாய்வுத் துறையினரின் மெத்தனப் போக்கு கவலையளிக்கின்றது. மராட்டிய மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக மராட்டிய மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருந்த மறைந்த ஹேமந்த் கர்கரே மிகச் சிறப்பான புலனாய்வுகளை செய்து இந்திய இராணுவத்தின் உளவுப்பிரிவில் பணியாற்றிய லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தை கைது செய்தார். மாலேகான் குண்டுவெடிப்பு மட்டுமின்றி சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு உட்பட பல குண்டு வெடிப்புகளுக்குப் பின் இராணுவத்தில் பணிபுரிந்த புரோகித்திற்கு தொடர்பு உண்டு என்பதை கர்கரே கண்டுபிடித்தார். புரோகித்தின் மடிகணிணியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அவர் இராணுவத்தில் பணியாற்றும் பலரையும் தனது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இசைவானவராக மாற்றியுள்ளார் என்பதையும் கர்கரேயின் புலனாய்வு தெளிவுப்படுத்தியது. ஆனால் கர்கரேயின் மரணத்திற்கு பிறகு இது குறித்தப் புலனாய்வு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற கர்னல்கள் ஹஸ்முக் பட்டேல், கைலாஷ் ராய்கர், ஆதித்யா பாபதிட்யா தர், பிரிகேடியர் மாத்துர், மேஜர் நித்தின் ஜோஷி மற்றும் மேஜர் பிரயாக் மோடர் ஆகியோருக்கும் குண்டுவெடிப்புகளுக்குப் பங்குண்டு என்று கர்கரேயின் புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த கருப்பாடுகள் மீது இது வரை முறையான நடவடிக்கை எடுக்கப்படாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. கர்கரேயின் புலனாய்வில் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மட்டுமில்லாமல் இன்னும் ஏராளமான இராணுவத்தினர் புரோகித்தின் கும்பலினால் மூளைச் சலவைச் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கர்கரேயின் புலனாய்வில் புலப் பட்டுள்ளது. காவி பயங்கரவாதத்தை ஒழிப்ப தற்கு காங்கிரஸ் கட்சிக்கு உண்மையில் அக்கறை இருந்தால் கர்கரேயின் புலனாய்வு அடிப்படையில் இராணுவத்தைச் சேர்ந்த காவி பயங்கரவாதிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்நிர்வாகக் குழு கோருகின்றது.
கே.ஜி. கண்ணபிரான் மரணத்திற்கு அனுதாபம்
மனித உரிமைப் போராளி கே.ஜி. கண்ணபிரான் அவர்களின் மரணம் மிகுந்த வருத்தத்தினை அளிக்கின்றது. தனது வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மிகச் சிறந்த போராளியாக வாழ்ந்தவர் கண்ணபிரான். அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தடா போன்ற கொடிய சட்டம் பாய்ச்சப்பட்ட போது அவர் கொதித்தெழுந்து உரிமைக்குரல் எழுப்பியதை தமுமுக நன்றியுடன் திரும்பிப் பார்க்கின்றது. அன்னாரின் இழப்பு மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக மனித உரிமைப் போராளிகளுக்கும் தமுமுகவின் தலைமை நிர்வாகக் குழு தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தேசிய நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்
மருத்துவ கல்விக்கான தேசிய நுழைவுத்தேர்வு வைக்கப்படும் என்ற இந்திய மருத்துவ குழுமத்தின் முடிவை தமுமுக கண்டிக் கின்றது. இது அடித்தட்டு மக்களுக்கு எதிரானது. எனவே மத்திய அரசு மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்ய மத்தியஅரசு உடனே ஆவன செய்ய வேண்டுமென தமுமுக கோருகின்றது.
சட்ட பயங்கரவாதத்திற்கு கண்டனம்
பழங்குடி இன மக்களின் உயர்விற்காகத் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றி வந்த உலகப்புகழ் பெற்ற மருத்துவர் பினாயக் சென்னுக்கு, ஆயுள் தண்டனை வழங்கிய, சட்ட பயங்கரவாதத்தை தமுமுக வன் மையாகக் கண்டிக்கிறது. உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் தலையிட்டு டாக்டர்.பினாயக்கை விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக