மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்குக் கொண்டு தமிழ்நாடு முஸ்ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் ஸமது, பொருளாளர் ஹாருன் ரஷீத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் தாய்வீடாக திகழும் நமது நாட்டில் குடியும், போதையும், மாபெரும் கேடுகளை உருவாக்கி விட்டிருக்கிறது. மக்களிடம் அரசியல் விழிப்புணர்வும், மறுமலர்ச்சி சிந்தனைகளும் பரவிவிடக் கூடாது என்பதாலேயே ஆளும் சக்திகள் இதுபோன்ற சீரழிவுகளுக்கு துணையாக இருக்கின்றன. மக்களின் போராட்ட எண்ணங்களை மழுங்கடிக்க செய்திட குடியும், போதை கலாச்சாரங்களும் நீடிப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
காந்தி தேசம் என்று புகழப்படும் நமது நாட்டில் காந்தியடிகளால் வெறுக்கப்பட்ட மதுக் கலாச்சாரம் ஊட்டி வளர்க்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் விழிப்புணர்ச்சி புகட்டப்பட்ட தமிழகத்தில், அவர் விரும்பிய பூரண மதுவிலக்கு ஏனோ கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் சீர்திருத்த கருத்துகளை முழங்கிய ஐயா பெரியார் அவர்கள் போதையூட்டும் கள்ளுக்கடைகளுக்கு எதிராக போராடினார். தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களையெல்லாம் வெட்டி சாய்த்தார். ஆனால், இன்றைய தமிழகத்தின் நிலை என்ன? ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடக்கிறது.

அரசாங்கமே சாராயக் கடைகளை நடத்தி மக்களை வழி கெடுக்கும் போக்கு கேவலமானது. ஒரு பக்கம் எங்கள் அரசு, முற்போக்கு அரசு என முழங்குகிறார்கள். சமூக சீர்த்திருத்தமே எமது லட்சியம் என பிரச்சாரம் செய்கிறார்கள்.
மறுபுறம், சமூக சீரழிவுக்கு காரணமான மதுக்கடை வியாபாரத்தை நியாயப்படுத்துகிறார்கள். அரசுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானத்தை தரும் டாஸ்மாக் கடைகளை மூடினால், அரசாங்கத்தை எப்படி நடத்த முடியும் என எதிர் கேள்வியெழுப்புகிறார்கள்.
காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் மட்டுமில்லாமல் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிஜோராமில் இன்றும் பூரண மதுவிலக்கு அமல் இருக்கிறது. மதுக்கடை வருமானம் இல்லாமலேயே இந்த நான்கு மாநில அரசுகளும் நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளன.
இது தமிழ்நாட்டுக்கு ஏன் சாத்தியமாகாது? வாகன தயாரிப்பு நிறுவனங்களும், கணினி மென் பொருள் தொழில்களும், மின்னணு தொழிற்சாலைகளும், ஜவுளி ஆலைகளும் நாளும் பெருகும் தமிழ் நாட்டில், மாற்று வருமானத்திற்கு வழி இருக்கிறது. ஆனால், அரசு அதை சிந்திக்க மறுக்கிறது அல்லது தவிர்க்கிறது!
தந்தையைக் கொன்ற மகன், மனைவியைக் கொன்ற கணவன், பிள்ளைகளைக் கொன்ற அப்பன் என நெஞ்சு நடுங்கும் செய்திகள் நித்தமும் வளர்வதற்கு, மது தான் காரணம் என்று அரசு அறியாமலா இருக்கிறது. வாகன விபத்துக்கள் பெருகுவதற்கு, டாஸ்மாக்குகள் பெருகியது தான் காரணம் என அரசுக்குத் தெரியாதா?
பனைமர ஓலைகளிலேயே,
கள்ளுண்ணாமையை எழுதிய,
வள்ளுவரின் நெறியைப் போற்றி,
நுங்கம்பாக்கத்தில் கோட்டம்
அமைத்த கலைஞர் குறள் நெறியைப் போற்றுவது உண்மையென்றால் மதுக் கடைகளை இழுத்து மூட முன்வர வேண்டும்.
ஆனால் இதற்கு மாற்றமாக புதிய மது உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி வழங்குவதுடன் நடப்பு ஆண்டில் மது விற்பனை 15 ஆயிரம் கோடியை தாண்டும் என்று மார்தட்டிக் கொள்வதற்கு உண்மையான காரணம் என்ன? டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டுதான் இலவச திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். இலவச தொலைக்காட்சிகள் உள்ளிட்ட கவர்ச்சி திட்டங்களுக்கு வாரி வழங்குவது டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானம் தான்!

எதிர்வரும் மார்ச் 7, 2010 ஞாயிறு அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மதுக்கடை மறியல் போர் மிகுந்த எழுச்சியோடு நடைபெறவிருக்கிறது.
போதையில் தடுமாறும் கணவனின் நிலைகண்டு கலங்கும் தாய்மார்களின் கண்ணீர் போக்க, அதைக் கண்டு கதறும் பிள்ளைகளின் துயரம் போக்க, மகன்களின் மது பழக்கத்தை கண்டு பதறும் பெற்றோர்களின் வாட்டம் போக்க... பொதுமக்கள் இப்போராட்டத்திற்கு திரண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா திருச்சியில் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, வடசென்னை மாவட்டம் புரசைவாக்கத்திலும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தென் சென்னை மாவட்டம் திருவல்க்கேணியிலும், மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் ஹாருன் ரசீத் காஞ்சி மாவட்டம் பல்லாவரத்திலும் தலைமை தாங்குகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக