வியாழன், 16 ஜனவரி, 2014
சனி, 23 ஏப்ரல், 2011
துபை தமுமுக மர்க்கஸில்...



இறைவனின் அருளால் 22:4:2011 வெள்ளி அன்று இரவு 9:00 மணியளவில் துபை தமுமுக மர்க்கஸில் துபை மண்டல தமுமுக தலைவர் சகோதரர் அப்துல்காதர் அவர்கள் திருக்குர்ஆன் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், தனது உரையில், என்றும் மனிதர்களுக்கு மத்தியில் சிந்தனை மாற்றங்களை உருவாக்கி மனிதனை வெற்றியாளனாக அழைத்துச் செல்லும் பொக்கிசமாக அல்லாஹ்வின் மிகப் பெரிய அருள்கொடையாக திருமறை இருப்பதை பல வரலாற்று சம்பவங்களை எடுத்துச் சொல்லி நினைவுறுத்தினார்.
சிறப்பான இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள், எல்லாப்புகழும் இறைவனுக்கே.
புதன், 20 ஏப்ரல், 2011
இஸ்லாமிய சொற்பொழிவு அழைப்பிதல்
அன்புடையீர், இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி 22:4:2011 இரவு 9 மணியளவில், துபை தமுமுக மர்க்கஸில் சகோதரர் அப்துல் காதர்அவர்கள் திருக்குர்ஆன் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
புதன், 2 மார்ச், 2011
சனி, 12 பிப்ரவரி, 2011
தமுமுக துபை மர்க்கஸில் இணையதளம் மூலமாக தலைவரின் உரை.


இறைவனின் கிருபையால், பிப்ரவரி 10 வியாழன் இரவு 10 மணியளவில் தமுமுக துபை மர்க்கஸில் தாயகத்தில் இருந்து, தமுமுக தலைவர் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இணையதளம் மூலமாக இன்றைய அரசியல் சூழ்நிலைகளை பற்றி உரை நிகழ்த்தினார்கள்,கடந்த மாதம் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவிற்கு பின் முதன் முதலாக வளைகுடா இயக்க சகோதரர்களுக்கு மத்தியில் இணையதளம் மூலமாக பேராசிரியர் அவர்கள் உரையாற்றியது துபை மண்டல தமுமுக சகோதர்களுடன்தான் என்பது குறிப்பிடத்தக்கது, உரைக்குப் பின் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்கள், நிகழ்விற்கு துபை மண்டல கிளை கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்புக் கொடுக்கப்பட்டது அனைத்து கிளை கழக சகோதரர்களும் ஆர்வமுடன் சமுதாய கவலையுடன் கலந்து கொண்டார்கள் . எல்லாப் புகழும் இறைவனுக்கே.
வியாழன், 10 பிப்ரவரி, 2011
இன்ஷா அல்லாஹ் தமுமுக துபை மண்டலம் சார்பாக நடைப்பெறும் வாரந்திர அமர்வுகளும் இடங்களும்.
| இன்ஷா அல்லாஹ் தமுமுக துபை மண்டலம் சார்பாக நடைப்பெறும் வாரந்திர அமர்வுகளும் இடங்களும்.
|
சனி, 5 பிப்ரவரி, 2011
சனி, 15 ஜனவரி, 2011
ஏகத்துவ வாதிகளை ஒன்றிணைத்த இஸ்லாமிய நிகழ்ச்சி


ஜனவரி 14 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மர்க்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்றது, தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள இஸ்லாமிய அழைப்பாளர் கோவை அய்யூப் அவர்கள் நாம் நேசிப்போருடன் சுவனத்தில் என்ற தலைப்பில் உரையாற்றினார், தனது உரையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சுவனத்தில் இருப்பதற்கு இறைநம்பிக்கையாளர்கள் செய்ய வேண்டிய அமல்களை எடுத்துரைத்தார்,
உணர்வுப் பூர்வமான உரையாக அய்யூப் அவர்களின் உரை இருந்தது, இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர், எல்லாப் புகழும் இறைவனுக்கேஞாயிறு, 26 டிசம்பர், 2010
ஞாயிறு, 28 நவம்பர், 2010
துபாய் தமுமுக மர்க்கஸில் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
துபாய் தமுமுக மர்க்கஸில் தமிம் அன்சாரி உரை
அதை தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் தமிழக துணை பொதுச்செயலாளர் சகோதரர் தமிம் அன்சாரி அவர்கள் பாபரி மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக தமிழகத்தில் இருந்தபடி தொலைப்பேசி மூலம் உரையாற்றினார்கள் தனது உரையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளையும் நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக முஸ்லிம் சமுதாய மக்களின் உள்ளக் குமுறல்களையும் ,மற்றும் சகோதர சமுதாய மக்கள் சட்ட வல்லுனர்கள் முன்னாள் நீதிபதிகள் நியாயவான்கள் ஆகியோர்களின் கருத்துக்களையும் அவர்களின் கவலைகளையும் எடுத்துரைத்தார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக எடுக்கவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் பரிமாறிக் கொண்டார்கள், மிகப்பெரிய அரசியல் சதி அரங்கேறி நீதித் துறையின் பரிபாலனம் சிதைக்கப்பட்டு நிர்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப் பட்ட தீர்ப்பு என்றும், முஸ்லிம்கள் இந்நேரத்தில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து ஒற்றுமையாக செயல்படக்கூடிய தருணம் என்றும் எடுத்துரைத்தர்கள்.
இறுதியாக நிகழ்வில் கலந்துக் கொண்ட சகோதரர்களின் தீர்ப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலுரைத்தார்கள், இன்ஷா அல்லாஹ் உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற சிந்தனையோடு இறைவனின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கலந்துக் கொண்ட சகோதரர்கள் கலைந்துச் சென்றார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.
புதன், 16 ஜூன், 2010
முமுக - துபை மண்டலத்தின் வாராந்திர நிகழ்ச்சிகள்
| ||||||
Chin music and high voltage T20 action on MSN Sports Sign up now.
வெள்ளி, 11 ஜூன், 2010
பேரா.முனைவர்.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்
www.tmmkdubai.tk
திங்கள், 31 மே, 2010
இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்...
இன்ஷா அல்லாஹ் வருகின்ற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையன்று முமுக - துபை மண்டலம் சார்பாக துபையின் பல்வேறு இடங்களில் நடக்கவிருக்கின்ற இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியின் விவரங்கள்.
வாய்ப்புள்ளவர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புதன், 19 மே, 2010
புதன், 7 ஏப்ரல், 2010
வியாழன், 1 ஏப்ரல், 2010
செவ்வாய், 23 மார்ச், 2010
வியாழன், 18 மார்ச், 2010
துபை முமுக வின் வாராந்திர (18,19-march-2010) சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் (19-march-10) இன்று இரவு 8.30 மணியளவில் நமது துபை ஹோர்லன்ஸ் போஸ்ட் ஆபீஸ் பள்ளியில். துபை முமுக சகோதரர் முகமது பிலால் அவர்கள் சிறப்புரையாற்றயிருக்கின்றார்கள். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமுமுக துபை மண்டலம் Headline Animator
குர்ஆனை அனைத்து மொழிகளிலும் படிக்க
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.
அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.
*.தூங்கும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322
பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:
غُفْرَانَكَ
ஃகுப்(எ)ரான(க்)க
பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7
*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
ஆதாரம்: நஸயீ 5391, 5444
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 1165
*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّه
பி(இ)ஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345
*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:
பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611
*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு
பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
ஆதாரம்: புகாரி 614, 4719
*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165
*.உண்ணும் போது ஓதும் தூஆ
பிஸ்மில்லாஹி வ அலா பர(க்)கத்தில்லாஹி.
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டும்,அவனது அபிவிருத்திகள் தரும் அருளைக் கொண்டும் உண்ணத் தொடங்குகிறேன்.
*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781
*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915
*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805
*.பயணத்தின் போது ஓதும் துஆ:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.
பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.
பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللَّهُ
யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்
எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
ஆதாரம்: புகாரி 6224
*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த
இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306
*.புத்தாடை அணியும் போது தூஆ
அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.
இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் தூஆ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாதனா வ இலைஹின் நுஷூர்.
நாம் (சிறிய மௌத்தாகிய தூக்கத்தில்) இறந்த பின்னர் நம்மை உயிர் பெறச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
*.களா (இயற்கைத் தேவைக்காகப்) போகும் போது ஓதும் தூஆ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஃகுபுஃதி வல் ஃகபாஇஃதி.
அல்லாஹ் ! நான் தீய ஆண்,பெண் ஷைத்தான்கலிடமிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
*.இயற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வரும் போது ஓதும் தூஆ
அல்லாஹ்!நான் உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்பம் தரக்கூடியதை நீக்கி, எனக்குச் சுகம் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ
அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!
*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ
பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவதும், நன்மையைச் செய்யும் சக்தியும் மேலான, மகத்தான அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.
*.பிறையைக் கண்டதும் ஓதும் தூஆ
அல்லாஹும்ம அஹில்லஹூ அலைனா பில் யும்னி வல் ஈமான் வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம் வத்தவ்ஃபீகி லிமா துஹிப்பபு வதர்ளா.
அல்லாஹ்! இந்த பிறையை அபிவிருத்து உள்ளதாகவும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்பக் கூடியவற்றையும், பொருந்திக் கொள்ளக் கூடியவற்றையும் செய்வதற்கு வாய்ப்பையும் தரக் கூடியதாகவும் வெளியாக்கி வை! (பிறையே!) எனது ரப்பும், உனது ரப்பும்
அல்லாஹ் தான்!
*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ
அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.
அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.
*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா
அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!



































![[HORALANZ.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLkC6ZoqXuppP2TtLMEXXrcmkLPbGmpQOn5zCLWXKidB1b_u74c-WRqwljCl4NCDR7eyPh78w5wml9tTKEgHwupM-lrsOf_wDaYeYJGWUKH8Pll90l-YRFab1TzZxza55ynFhXnmxnM2T_/s1600/HORALANZ.jpg)

