அல்லாஹ்வின் திருப்பெயரால்...
துபாய் தமுமுக மர்க்கஸில் தமிம் அன்சாரி உரை
அதை தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் தமிழக துணை பொதுச்செயலாளர் சகோதரர் தமிம் அன்சாரி அவர்கள் பாபரி மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக தமிழகத்தில் இருந்தபடி தொலைப்பேசி மூலம் உரையாற்றினார்கள் தனது உரையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளையும் நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக முஸ்லிம் சமுதாய மக்களின் உள்ளக் குமுறல்களையும் ,மற்றும் சகோதர சமுதாய மக்கள் சட்ட வல்லுனர்கள் முன்னாள் நீதிபதிகள் நியாயவான்கள் ஆகியோர்களின் கருத்துக்களையும் அவர்களின் கவலைகளையும் எடுத்துரைத்தார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக எடுக்கவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் பரிமாறிக் கொண்டார்கள், மிகப்பெரிய அரசியல் சதி அரங்கேறி நீதித் துறையின் பரிபாலனம் சிதைக்கப்பட்டு நிர்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப் பட்ட தீர்ப்பு என்றும், முஸ்லிம்கள் இந்நேரத்தில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து ஒற்றுமையாக செயல்படக்கூடிய தருணம் என்றும் எடுத்துரைத்தர்கள்.
இறுதியாக நிகழ்வில் கலந்துக் கொண்ட சகோதரர்களின் தீர்ப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலுரைத்தார்கள், இன்ஷா அல்லாஹ் உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற சிந்தனையோடு இறைவனின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கலந்துக் கொண்ட சகோதரர்கள் கலைந்துச் சென்றார்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
அன்புடன்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக