த. மு. மு. க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்கேற்றார்.
அஸ்ஸலாமு அலைக்கும் !
தோப்புத்துறை அபுல் ஹஸன் (சார்ஜா மண்டல த. மு. மு. க பொருளாலர்) திருமணம் த.மு.மு.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்கேற்றார்.
நாகை மாவட்டம், தோப்புத்துறையை சேர்ந்த அபுல் ஹஸன்(சார்ஜா மண்டல த. மு. மு. க பொருளாளர்) அவர்களுக்கும், நாகை மாவட்டம், துளசியாப்பட்டிணம், அப்துல் ஹஸன் அவர்களின் மகள் ஜம்ஜத் அவர்களுக்கும்,10.10.2010 அன்று காலை துளசியாப்பட்டிணம் பள்ளிவாசலில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில்…
த. மு. மு. க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொது செயலாலர் தமீமுன் அன்சாரி, மமக பொருளர் S.S. ஹாருன் ரஷீத், சார்ஜா மண்டல தலைவர் நெல்லிக்குப்பம்.இக்பால், தோப்புத்துறை மற்றும் துளசியாப்பட்டினம் ஜமாத்தார்கள், மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மணமக்களை வாழ்த்தி சிறப்புறையாற்றினார்கள்.துளசியாப்பட்டினம் ஜமாத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
அன்று மாலை துளசியாப்பட்டினம் ஜமாத்மன்ற தலைவர் குஞ்சாலி மரைக்காயர் அவர்கள் வீட்டில் தமுமுக, மமக தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கட்டிமேடு, முத்துபேட்டை, நாச்சிகுளம், துளசியாப்பட்டினம்,மற்றும் தோப்புதுறையை சேர்ந்த தமுமுக, மமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.



—- செய்தி : தோப்புத்துறை ஹாஜாதீன்—-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக