மதுக் கடைகளை அகற்றக் கோரி தமிழகம் தழுவிய மறியல் போராட்டத்திற்கு மனித நேயக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன் படி இன்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் ஐஸ் அவுஸ் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது திருவல்லிக்கேணி நெடுஞ் சாலையில் உள்ள மதுக்கடையை தாக்குவதற்காக ஐஸ் அவுஸ் பகுதியில் மனித நேய மக்கள் கட்சியினர் திரண்டனர்.
அவர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்களில் பலர், தப்பி ஓடி டாஸ்மாக் மதுக்கடை மீது கல்வீசி தாக்கினார்கள்.
இதில் மது அருந்திக் கொண்டிருந்த ஒரு நபர் மீது கல் விழுந்தது. பாட்டில் உடைந்து அவர் காயமடைந்தார். இதையடுத்து பயந்து போன டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடைக்குள் பதுங்கி கடையைப் பூட்டிக் கொண்டனர்.
ஆனால் அவர்களை வெளியேற விடாமல் மனித நேயக் கட்சியினர் கடையை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் புரசைவாக்கத்தில் ஹைதர் அலி தலைமையில் மனித நேய மக்கள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு விரைந்து சென்று 250 பேரை கைது செய்தனர்.
அம்பத்தூர் மதுக்கடை முன்பும் இதேபோல முற்றுகை போராட்டம் நடந்தது. இங்கு 150 பேர் கைதாகினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக