பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹிம்
அல்லாஹ்வின் உதவியால் முமுகவின் சார்பாக அமீரகம் முழுவதும் ரமலான் வசந்தம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 24-08-2010 அன்று துபாய் அல்கூஸ் கிளையின் சார்பாக லேபர் கேம்பில் மாலை 5மணி முதல் மஹ்ரிப் வரை மார்க்கம் மற்றும் அரசியல் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமுமுகவின் தலைமைக் கழக பேச்சாளார் சகோ.சிவகாசி முஸ்தபா அவர்கள் ”நோன்பு தரும் பயிற்ச்சி” என்ற தலைப்பிலும், மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சகோ.எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் மமகவின் செயல்பாடுகள் தொடர்பாகவும்,எதிர் கால திட்டங்கள் சம்பந்தமாகவும் விவரித்தார்கள்.
மேலும் கலந்து கொண்ட தோழர்களின் ஐயங்களுக்கு தெளிவான முறையில் அரசியல் புலமையோடு பதில் அளித்தார்கள்.
இதில் திரளான தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக