இஸ்ரேலிய அரசினால் பின்பற்றப்படும் கொள்கைகள் மத்திய கிழக்கின் அமைதிக்கும் ஸ்திரப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன என துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (11.01.2011) தோஹாவின் அல் ஷர்க் செய்திப் பத்திரிகைக்குப் பேட்டியளித்துப் பேசிய அர்தூகன், காஸாவுக்கான ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரண உதவிக்குழுவினர் மீதான படுகொலைத் தாக்குதல் முதலான இன்னோரன்ன தான்தோன்றித்தனமான இஸ்ரேலிய வெளியுறவுக் கொள்கைகள், மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச நிவாரண உதவிக் குழுவினரோடு சென்ற ஃபுளோடில்லா கப்பலை மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் இடைமறித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அதில் பயணித்த துருக்கியச் செயற்பாட்டாளர்களில் சிலரை படுகொலை செய்து, ஏனையோரைப் பலவந்தமாகச் சிறைப்படுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு முதல் மிகக் கடுமையான முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் காஸா மக்களுக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் முதலான பொருட்களை ஏற்றிச் சென்ற நிவாரண உதவிக் கப்பலே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உள்ளானது.
ஐ.நா. மனித உரிமைக் கழகத்தினால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழு 2010 செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 'மேற்படி மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்' என்பதை உறுதிப்படுத்தியுள்ளமையை துருக்கியப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 56 பக்கங்களைக் கொண்ட ஐ.நா. அறிக்கையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை வேண்டுமென்றே மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் சிலரைப் படுகொலை செய்தும் மற்றும் பலரை சித்திரவதை செய்தும் மிகக் கடுமையான போர்க்குற்றங்களை இழைத்துள்ளது என்றும், ஐ.நா.வின் தகவல் தேடும் சுயாதீனக்குழு உலகில் உள்ள எந்த ஒரு நாடும் சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்படும் அதிகாரத்தைக் கொண்டதில்லை என்பதை உறுதிப்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் அர்தூகன் தெரிவித்துள்ளார்.
காஸாவுக்கான மனிதாபிமான நிவாரணப் பணியின் போது அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட தம்முடைய நாட்டுப் பிரஜைகளுக்கான நஷ்ட ஈடு, தமது நாட்டுக்கு இழைத்த அநீதிக்காக இஸ்ரேலிடமிருந்து உத்தியோகபூர்வ மன்னிப்புக்கோரல் எனும் கோரிக்கைகளை துருக்கி ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி, காஸா மீது 2007 ஜூன் மாதம் முதல் இன்றுவரை தொடரும் மனிதாபிமானமற்ற, சட்டவிரோத முற்றுகையை முடிவுக்குக்குக் கொண்டுவர முன்வருமாறு அனைத்துத் தரப்பினரை நோக்கியும் அவர் அழைப்புவிடுத்துள்ளார். மேற்படி முற்றுகையால் பலஸ்தீன் பொதுமக்களின் சுமுகவாழ்வு பெரிதும் சீர்குலைந்திருப்பதாகவும், சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீன் மக்கள் தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும், வறுமையும் வேலையின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் துருக்கியப் பிரதமர் விசனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய அரசினால் பின்பற்றப்படும் கொள்கைகள் மத்திய கிழக்கின் அமைதிக்கும் ஸ்திரப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன என துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (11.01.2011) தோஹாவின் அல் ஷர்க் செய்திப் பத்திரிகைக்குப் பேட்டியளித்துப் பேசிய அர்தூகன், காஸாவுக்கான ஃப்ரீடம் ஃபுளோடில்லா நிவாரண உதவிக்குழுவினர் மீதான படுகொலைத் தாக்குதல் முதலான இன்னோரன்ன தான்தோன்றித்தனமான இஸ்ரேலிய வெளியுறவுக் கொள்கைகள், மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச நிவாரண உதவிக் குழுவினரோடு சென்ற ஃபுளோடில்லா கப்பலை மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் இடைமறித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், அதில் பயணித்த துருக்கியச் செயற்பாட்டாளர்களில் சிலரை படுகொலை செய்து, ஏனையோரைப் பலவந்தமாகச் சிறைப்படுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு முதல் மிகக் கடுமையான முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் காஸா மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் முதலான பொருட்களை ஏற்றிச் சென்ற நிவாரண உதவிக் கப்பலே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உள்ளானது.
ஐ.நா. மனித உரிமைக் கழகத்தினால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழு 2010 செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில்,"மேற்படி மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்"என்பதை உறுதிப்படுத்தியுள்ளமையை துருக்கியப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 56 பக்கங்களைக் கொண்ட ஐ.நா. அறிக்கையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை வேண்டுமென்றே மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் சிலரைப் படுகொலை செய்தும் மற்றும் பலரை சித்திரவதை செய்தும் மிகக் கடுமையான போர்க்குற்றங்களை இழைத்துள்ளது என்றும், ஐ.நா.வின் தகவல் தேடும் சுயாதீனக்குழு 'உலகில் உள்ள எந்த ஒரு நாடும் சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்படும் அதிகாரத்தைக் கொண்டதில்லை'என்பதை உறுதிப்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் அர்தூகன் தெரிவித்துள்ளார்.
காஸாவுக்கான மனிதாபிமான நிவாரணப் பணியின் போது அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட தம்முடைய நாட்டுப் பிரஜைகளுக்கான நஷ்ட ஈடு, தமது நாட்டுக்கு இழைத்த அநீதிக்காக இஸ்ரேலிடமிருந்து உத்தியோகபூர்வ மன்னிப்புக்கோரல் எனும் கோரிக்கைகளை துருக்கி ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி, காஸா மீது 2007 ஜூன் மாதம் முதல் இன்றுவரை தொடரும் மனிதாபிமானமற்ற, சட்டவிரோத முற்றுகையை முடிவுக்குக்குக் கொண்டுவர முன்வருமாறு அனைத்துத் தரப்பினரை நோக்கியும் அவர் அழைப்புவிடுத்துள்ளார். மேற்படி முற்றுகையால் பலஸ்தீன் பொதுமக்களின் சுமுகவாழ்வு பெரிதும் சீர்குலைந்திருப்பதாகவும், சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீன் மக்கள் தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும்,காஸா பிராந்தியத்தில் வறுமையும் வேலையின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் துருக்கியப் பிரதமர் விசனம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக