

கடந்த 09.01.2011 அன்று சென்னை தியாகராய நகரில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய “என்ன செய்யலாம் இதற்காக?” என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலினை காந்தியகிராம பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் என். மணிகண்டன் வெளியிட இலங்கையின் ஐ.எம்.ஏ.டீ.ஆர் மன்றத்தின் தலைவர் நிமல்கா பெர்ணான்டோ பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மதிமுக துணைபொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தமிழ்தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், புகழேந்தி தங்கராசு, தமிழ் ஆர்வலர்கள், இந்திய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமுமுக தலைவர், ஈழபடுகொலை சம்பந்தமான அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் எனவும், அம்மக்களை நிரந்தரமாக குடியமர்த்த வேண்டும் எனவும் இராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளி அவர் செய்த போர்க் குற்றத்திற்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் எனவும், ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தமுமுகவும் மமகவும் ஜனநாயக வழியில் எப்போதும் போராடும் எனவும் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், தமிழர் ஆகிய நாம் பல கட்சிகளின் பின்னால் ஓட்டுக்காகப் போகிறோம். தமிழர்கள் பாதிக்கப்பட்டால் அனைவரும் ஓர் அணியில் வரவேண்டுமென உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக