தமிழகத்தில் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்குவதற்காக இதுவரை 3716 கோடி ரூபாய் செலவு செய்துள்ள தமிழக அரசு, ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண நிதியாக 40 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில்,
"தமிழகத்தில் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 7,716 கோடி செலவில் 1,62,80,000 வண்ண தொலைக்காட்சிகள் கொள்முதல் செய்யப்பட்டு, 1,58,08,285 தொலைக்காட்சிகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 249 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், "இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 40 கொடி ரூபாய், இலங்கை நிவாரண பொருட்களுக்காக செலவிட்ட போது, மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஈழத்தமிழர் நிவாரண நிதியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக