
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்குகள் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்குள், அடுத்த ஊழல் வெளியாகியுள்ளது. திவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வர்த்தக நிறுவனமான அண்டிரிக்ஸ் நிறுவனம், ஒதுக்கிய அலைவரிசையில் 2ஜி இழப்பை விட, அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் இரு செயற்கை கோள் ஏவுவது தொடர்பாக தணிக்கை அதிகாரி நடத்திய விசாரணையில், பெங்களூரில் உள்ள திவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கு எந்தவித ஏலமின்றி விலை குறைவாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோ பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால், இதில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரி கூறியுள்ளார். ஆகவே விரைவான விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே உலகையே உலுக்கிய இந்தியாவின் 2ஜி அலைக்கற்றை ஊழலால் இந்தியாவின் மானம் போயிருக்கையில், தற்போது நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிலும், ஊழல் நடந்திருப்பது நாட்டு மக்களை மேலும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக