ஞாயிறு, 20 மார்ச், 2011

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் !

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள கடந்தாண்டு இறுதிவாக்கில் பத்திரிகைகளில் கசிந்த போது உலகிலேயே முதலாம் பெரிய ஜனநாயகம் என்று போற்றிப் புகழப்படும் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை சிரிப்பாய்ச் சிரித்தது. உள்நாட்டுத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் அபிலாஷைகளுக்கு உட்பட்டுத்தான் இன்னாருக்கு இன்ன மந்திரிப் பதவி என்பது தீர்மானிக்கப்படுகிறது என்கிற உண்மை தெட்டத் தெளிவாக சாட்சி ஆதாரங்களோடு மக்கள் முன் நிரூபணமானது.

அப்போது ஜனநாயகக் கோவணத்தில் விழுந்த பெத்தாம் பெரிய ஓட்டைக்கு சர்வகட்சிகளும் சேர்ந்து ஒருவழியாக ஒட்டுப் போட்டு ஒப்பேற்றினார்கள். அதற்குள் ஏற்கனவே பலமுறை அம்பலமாகி நைந்து போன ஜனநாயகக் கோவணத்துக்கு இப்போது விக்கிலீக்ஸ் வடிவத்தில் அடுத்த ஆபத்து வந்துள்ளது. இந்தியத் தரகு முதலாளிகளே கேந்திரமான அமைச்சகத் துறைகளில் புகுந்து புறப்படும் போது அமெரிக்கா என்ன சும்மாவா?

இந்தியா சர்வதேச அரங்கில் பல்வேறு தருணங்களில் எடுத்த முடிவுகள் அமெரிக்க நலன்களுக்கு ஒத்திசைவானதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள இங்கே அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள், குறிப்பான சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள அப்பட்டமான அமெரிக்க அடிவருடிகளை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது பற்றியும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பேசிக் கொண்ட விவரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

மத்தியில் அமைச்சர்கள் தொடங்கி பிரதமர் வரையில் அமெரிக்க அடிமைகள் என்பது நமக்கொன்றும் ஒன்றும் புதிய செய்தியில்லையென்றாலும் தற்போது அமெரிக்கர்கள் தங்கள் சொந்த வாயாலேயே “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” என்று அங்கீகரித்து உறுதி செய்திருப்பது தான் சிறப்பு. குறிப்பாக 2006-ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றங்களில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராய் இருந்த மணி சங்கர் அய்யர் நீக்கப்பட்டு முரளி தியோரா நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிகாரிகள் மிகவும் புளகாங்கிதம் அடைந்துள்ளனர். இந்த விபரங்கள் அடங்கிய இரகசிய ஆவணங்களை இந்துப் பத்திரிக்கை விக்கிலீக்சிடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இது குறித்தும் தொடர்ந்து சாமியாடி வரும் எதிர்க்கட்சிகள், பிரதமர் இவ்விவகாரம் குறித்த விளக்கம் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிவருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இவ்விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் ஜஸ்வந்த் சிங் பேசியுள்ளார். இந்திய வெளிவிவகாரக் கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும் படி விடக்கூடாது என்றெல்லாம் பெரிய நன்னூல் போல வியாக்கியானமும் செய்துள்ளார். இதே ஜஸ்வந்த் சிங் தான் பாராளுமன்ற எம்.பிக்களில் அமெரிக்காவிற்கு அரசாங்க மட்டத்தில் தரகு வேலை பார்க்கும் அமைப்பு ஒன்றை 2002-ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது துவக்கி வைத்தவர்.

தரகு முதலாளிகளின் சங்கமான ஃபிக்கியின் (Federation of Indian Chambers of Commerce and Industry) பேராதரவுடன் 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்தோ-அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் குழுமம் என்கிற அமெரிக்க அடிவருடிக் கும்பலைத் துவக்கி வைத்ததே ஜஸ்வந்த் சிங் தான். அதில் உறுப்பினராய் இருந்து தனது விசுவாசத்தை நிரூபித்துக் காட்டியதற்குக் கூலியாகத்தான் 2006-ஆம் ஆண்டு முரளி தியோராவுக்கு பெட்ரோலிய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தான் பாரதிய ஜனதாவின் அமெரிக்க ‘எதிர்ப்பு’ வீரவசனங்களின் லட்சணம்.

எதிர்கட்சிகளெல்லாம் அடிப்பது போல் அடிப்பதற்கு அழுவது போல் அழுது, தனது வழக்கமான வரலாற்றில் பெரும் சிறப்புப் பெற்ற ‘விளக்கத்தை’ கூடிய விரைவில் மவுனமோகன் சிங் வழங்கத் தான் போகிறார். ஆதி காலத்தில் ஹைட் சட்டத்திற்கும் சமீப காலத்தில் எஸ்-பேன்ட் விவகாரத்திலும் மிஸ்டர் மவுனத்தால் வழங்கப்பட்ட அந்த சிறப்பான விளக்கம் – “எனுக்கு ஒன்னியும் தெரியாது” என்பது தான். இவ்விவகாரத்திலும் கூடிய விரைவில் அதே போன்றதொரு ‘விளக்கத்தை’ அளிக்கத் தான் போகிறார். அதைத் தொடர்ந்து விஷயத்தை அறுபதடி ஆழக் குழிக்குள் போட்டு மூடி விட்டு பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பை எல்லோருமாகச் சேர்ந்து காத்துக் கொள்வார்கள்.

ஆனால், வினவு வாசர்கள் இவ்விவகாரத்தை ஏதோ ‘அமெரிக்காவுக்கு ஆதரவான ஒருத்தரை மன்மோகன் அமைச்சராக்கினார்’ என்கிற அளவில் மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. மணிசங்கரய்யரை நீக்கி விட்டு முரளி தியோராவை அமைச்சராக்கியதன் பின்னணியில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.

ணிசங்கரய்யர் பெட்ரோலியத் துறை அமைச்சராக நீடிப்பதை ஏன் அமெரிக்கா விரும்பவில்லை?

இதற்கு விடை காணும் முன் அமெரிக்காவின் எண்ணைப் பசியைப் பற்றி சுருக்கமாகவாவது புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தீராத பெட்ரோல் பசியின் காரணமாகத் தான் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தி முக்கியமான எண்ணை வளம் கொண்ட நாடுகளைத் தனக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. தனக்குக் கட்டுப்பட்டு ஒத்து வராத காரணத்தால் தான் பேரழிவு ஆயுதங்களை இரகசியமாக தயாரித்துக் கொண்டுள்ளது என்று சர்வதேச அளவில் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு பீதியூட்டி ஈராக் மேல் போர் தொடுத்து அதைத் தனது நேரடி இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இவ்வகையில் அமெரிக்காவுக்கு இப்பிராந்தியத்தில் கட்டுப்படாத இன்னொரு நாடு ஈரான். உலகின் மூன்றாவது பெரிய நிலத்தடி எண்ணை ரிசர்வையும் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு ரிசர்வையும் கொண்டுள்ள ஈரான் அமெரிக்காவுக்குக் கட்டுப்படாததோடு, இரண்டாயிரங்களின் மத்தியில் இருந்து தனது எண்ணை வர்த்தகத்தை சர்வதேச நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அமெரிக்க டாலரில் நடத்துவதில்லை என்று தீர்மானித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாளும் பிராந்திய ரவுடி நாடான இஸ்ரேலை நேரடியாக விமரிசித்து – விரோதித்துக் கொண்டுள்ளது ஈரான்.

அமெரிக்காவின் தீராத பெட்ரோல் பசியை ஈடுகட்ட வேண்டுமானால், சல்லிசாக மத்திய கிழக்கு எண்ணை வளத்தை கேட்பாரின்றி உறிஞ்ச வேண்டியது அவசியம். மேலும், சரிந்து வரும் தனது டாலரை நிலை நிறுத்த படாத பாடு பட்டு வரும் வேளையில் அதற்கு ஒரு மாற்று தோன்றி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது அமெரிக்கா. எனவே ஈராக்கை ஒழித்துக் கட்டியது போலவே ஈரானுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்கா உள்ளது. ஈரானின் மேல் போர் தொடுக்க ஒரு சந்தர்ப்பத்தையும் காரணத்தையும் எதிர்பார்த்து இரத்த வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ஈராக் மேல் போர் தொடங்குவதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே எப்படி அமெரிக்கா அதன் மேல் பல்வேறு பொருளாதாரத் தடைகளைப் போட்டு பலவீனப்படுத்தியதோ அதே போல் ஈரான் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மட்டுமல்லாமல், ஈராக் போருக்கு முன் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளைப் போலவே இப்போது ஈரானும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச அளவில் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஈரானுடன் பொருளாதார உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச நாடுகளை நிர்பந்தித்தும் வருகிறது. ஈரானில் முதலீடு செய்யும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் அமெரிக்காவில் தமது தொழில் அலகுகளை நடத்த வேண்டுமானால் பெரும் நட்டஈடு வழங்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க, தொண்ணூறுகளின் மத்தியில் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை சப்ளை செய்யும் திட்ட முன்வரைவு ஒன்று முன்வைக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஈரானின் தெற்கு பார்ஸ் எண்ணை வயலில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி வரையில் குழாய் பதிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் இத்திட்டத்தில் இந்தியாவையும் ஈரான் இணைத்துக் கொண்டது. பிப்ரவரி 1999-ஆம் ஆண்டு ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே இது தொடர்பாக ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதில் தொடங்கி, இத்திட்டம் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (IPI) எரிவாயுக் குழாய்த் திட்டம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் இந்தியாவின் தலையில் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா சுமத்துகிறது. இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் மேற்கில் காலாவதியான அணு உலைகளை கொழுத்த காசுக்கு இந்தியாவின் தலையில் ஏகாதிபத்திய நாடுகள் கட்டி விட வகைசெய்தாலும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அமெரிக்காவின் பல்வேறு இராணுவ / இராசதந்திர நலன்களும் பொதிந்து கிடக்கிறது. இந்தியவை நிரந்தரமாக அமெரிக்காவின் அடிமை நாடாக வைத்திருப்பது, தெற்காசியப் பிராந்தியத்தில் தனக்குக் கட்டுப்பட்ட ஒரு அடியாளாக இந்தியாவை வைத்திருப்பது என்பனவற்றை உள்ளடக்கிய பல்வேறு விரிவான அம்சங்கள் கொண்டது.

அணுசக்தி ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இந்தியாவை ஐ-பி-ஐ எரிவாயுக் குழாய்த் திட்டத்திலிருந்து வெளியேறுமாறும், ஈரான் தனது மின் உற்பத்திக்காக அணு உலைகள் அமைப்பதையும் யுரேனியத்தை செரிவூட்டுவதை எதிர்த்தும் சர்வதேச அணுசக்தி முகமையில் (IAEA) இந்தியா வாக்களிக்க வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்திக்கிறது. அமெரிக்க நிர்பந்தத்திற்குப் பணிந்த இந்தியா, நவம்பர் 2009-இல் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது.

அதற்கும் முன்பாகவே 2006-ஆம் ஆண்டு முரளி தியோரா பெட்ரோலியத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின், உப்புசப்பில்லாத காரணங்களை முன்வைத்து ஐ-பி-ஐ எரிவாயுக் குழாய்த் திட்டத்திலிருந்தும் இந்தியா விலகுகிறது. இத்திட்டம் தொடர்பாக பாகிஸ்தான், ஈரான், இந்தியா இடையே நடக்கவிருந்த பல்வேறு முத்தரப்பு ஆலோசனைக் கூட்டங்களை சரியான காரணம் ஏதும் சொல்லாமல் இந்தியா புறக்கணித்துள்ளது.

ஈரானிலிருந்து எரிவாயுவை இந்தியா பெறும் திட்டத்திற்கு மாற்றாக துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கான், பாகிஸ்தான் வழியே இந்தியாவுக்கு எரிவாயுவைக் குழாய் மூலம் கொண்டு வரும் இன்னொரு திட்டத்தையும் இந்தியாவின் தலையில் சுமத்துகிறது அமெரிக்கா. இதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தாகியுள்ளது. ஆப்கானின் வடகிழக்குப் பகுதி அமெரிக்க எதிர்ப்பு தாலிபானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்றைய நிலையையும் பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்திலும் (NWFP) பலுச்சிஸ்தானத்திலும் நிலவும் குழப்பங்களையும் கணக்கில் கொண்டால், இத்திட்டம் நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை.

ஒருவேளை நேட்டோ படைகளை நேரடியாக இறக்கி குழாயை அமைத்து விட்டாலும், எரிவாயுக் குழாயின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்று இந்தியா தனது படைகளை ஆப்கானில் இறக்க வேண்டும் – அல்லது, எரிவாயுக் குழாயின் பாதுகாப்புக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதாவது ஆப்கான் புதைகுழியில் அமெரிக்கா சிக்குண்டுள்ள இன்றைய நிலையில், ஒன்று இந்தியா எரிவாயுக் குழாய் பாதுகாப்பு எனும் போர்வையில் நேரடியாக ஆப்கானில் இராணுவத் தலையீடு செய்ய வேண்டும் அல்லது மறைமுகமாக நேட்டோ படைகளின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்கா ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது.

துர்க்மெனிஸ்தானிலிருந்து எரிவாயுவைப் பெறுவது ஒப்பீட்டு ரீதியில் அதிக செலவு பிடிக்கும் திட்டம் என்பதோடு பாதுகாப்புப் பிரச்சினைகளும் உள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் எரிவாயுத் தேவையையும் நாளுக்கு நாள் எகிறி வரும் பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் கணக்கில் கொண்டால், இந்தியா ஈரானின் எரிவாயுவைப் பெறுவதே சிக்கனமானது – சிக்கலில்லாதது. ஆனால், நாட்டின் நலனைத் தூக்கி குப்பையில் போட்டு விட்டு நேரடியாக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது மவுனமோகன் தலைமையிலான இந்தியா அரசாங்கம்.

மணிசங்கரய்யர் மேலான அமெரிக்காவின் எரிச்சலுக்கு முக்கியமான காரணம் அவர் வெளிப்படையாக ஈரான் எரிவாயுக் குழாய்த் திட்டத்தை ஆதரித்ததோடு அதை முன்னெடுக்கவும் முயற்சித்தது தான். தற்போது விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி இருக்கும இரகசிய ஆவணங்களில் அமெரிக்க தூதரக அதிகாரி தனது குறிப்பில், இந்தியாவின் வெளிவிவகாரத் துறையில் தமக்கு இருக்கும் ஐந்தாம்படையில் ஒருவர், (அவர் கொஞ்சம் கவுரவமாக contacts என்கிறார்) மணிசங்கரய்யர் ஈரானுடனான எரிவாயுக் குழாய்த் திட்டத்தை முன்னெடுப்பது அத்துறையில் கடும் கசப்பை உண்டாக்கி விட்டுள்ளதாக தம்மிடம் தெரிவித்ததாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய வருகைக்கு முன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதும் ஆச்சரியகரமான மாற்றங்கள் இருந்திடக் கூடாது என்பதற்காக வெளிவிவகாரத் துறையை நேரடியாக மன்மோகன் சிங்கே தனக்குக் கீழ் கொண்டு வந்து விட்டார் என்றும், குறிப்பிட்ட அந்த அமைச்சரவை மாற்றத்தில் கபில் சிபல், சைஃபுத்தின் சோஸ், ஆனந்த் சர்மா, அஸ்வினி குமார் போன்ற அமெரிக்க நலன் விரும்பிகள் இடம்பெற்றிருப்பதையும் அந்த அதிகாரி தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அமைச்சரவை மாற்றத்திலேயே முக்கியமானதாகக் குறிப்பிடுவது மணிசங்கரய்யரின் நீக்கத்தைத் தான்.

ஆக, இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் ஈரானுக்கு எதிராகவும் சர்வதேச அரங்கில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – அதில் இந்தியாவின் நலனே பதிக்கப்பட்டாலும் கூட – என்று அமெரிக்கா காலால் இட்ட உத்தரவை நமது மவுனமோகன் தலையால் நிறைவேற்றியுள்ளார். முரளி தியோராவின் நியமனத்தை வெறுமனே அமெரிக்க சார்பு என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது – இந்த அமெரிக்க சார்பால் இந்தியா இழந்தது என்னவென்பதையும், மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சேர்த்து தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

லகின் பெரிய ஜனநாயகம்; மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் என்றெல்லாம் அலங்காரமாக பின்னி முடியப்பட்டுள்ள இந்தப் போலி ஜனநாயகக் கொண்டையின் உள்ளே புழுத்து நெளிவது அமெரிக்க நலன் என்னும் ஈரும் பேனும் தான். இது தம்மை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பச்சை துரோகம் எனும் கூச்ச உணர்வு கூட இல்லாமல் ஒரு தொழில் முறை தரகனைப் போல சூடு சொரணையில்லாமல் ஒருவனால் செயல்பட முடிகிறது என்றால், அவன் எப்பேர்பட்ட ஒரு அயோக்கியனாக இருக்க முடியும்? ஆனால், முதலாளித்துவப் பத்திரிகைகளோ இவரைத் தான் படித்தவரென்றும் அப்பாவியென்றும் ஓயாமல் நம் காதுகளுக்குள் ஓதிக்கொண்டுள்ளன.

இந்திய ஆளும் கும்பலின் அமெரிக்க அடிமைத்தனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்பே பத்திரிகைகளில் பேசப்பட்டிருந்தாலும் இப்போது மிக எடுப்பாக அமெரிக்கர்களின் வார்த்தைகளிலிருந்தே அம்பலமாகியுள்ளது.

நாடு எத்தகைய அபாயகரமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? ஆளும் காங்கிரசு கும்பலும் அதை தலைமை ஏற்றுநடத்தும் சோனியா – மன்மோகன்சிங் கும்பலும் எவ்வித கூச்ச நாச்சமின்றி அமெரிக்காவின் அடிமையாக இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்தக் கும்பலை அடித்து விரட்டாமல் இந்தியாவிற்கு இறையாண்மையோ, சுதந்திரமோ இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமுமுக துபை மண்டலம் Headline Animator

LinkWithin

Related Posts with Thumbnails

குர்ஆனை அனைத்து மொழிகளிலும் படிக்க

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!