

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ம.ம.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி போட்டியிடுகின்றார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் சென்னை மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்புடன் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று பகல் 3 மணியளவில் மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுதாக்கல் செய்தார் ஜவாஹிருல்லா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முத்துகுமரனிடம் நேற்று பகல் 12.15 மணிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தார்.அ.தி.மு.க.,மாவட்ட பொறுப்பாளர் அன்வர்ராஜா, செயலாளர் ஆனிமுத்து, மூவேந்தர் முன்னணி கழகம் பாண்டியன், இந்திய கம்யூ.,மாவட்ட செயலாளர் ராஜன் உட ன் இருந்தனர். இதன்பின் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டு அராஜக ஆட்சியால் மக்கள் பல்வேறு பாதிப்பு அடைந்தனர். மின்வெட்டு, மணல் திருட்டு, விலைவாசி உயர்வு, மீனவர்கள் கொலை என மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். சொந்த செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றுவதாக கூறிய ஹசன்அலிஎம்.எல்.ஏ., எதுவும் செய்யாததை மக்கள் மறக்கவில்லை.
நான் வெற்றி பெற்றால் ,ராமநாதபுரம் தொகுதியில் கடல்சார்ந்த தொழிற்சாலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பேன். மீனவர்கள் நலன் காக்கப்படும். தொகுதியிலே தங்கி மக்கள் பணியாற்றுவேன், என்றார்.
அஸ்லம் பாஷா வேட்புமனு தாக்கல்
ஆம்பூர் சட்டமன்ற மமக வேட்பாளர் அஸ்லம் பாஷா அவர்கள் நேற்று தேர்தல் அதிகாரி சாந்தாவிடம் வெய்புமனு தாக்கல் செய்தார், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் மமக பொதுச்செயலாளர் அப்துல் சமத் உள்பட திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக