மதுரை மாட்டுத்தாவணி பள்ளிவாசல் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, நேற்று மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் இம்ரான் தலைமையில் 200 பேர் பங்கேற்றனர். இதன் காரணமாக, டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதன்மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். யாரும் கைது செய்யப்படவில்லை. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
டாஸ்மாக் கடை பிரச்னைக்கு சமரசம்
மார்ச் 02,2011,
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே டாஸ்மாக் கடையை(5123) இடமாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மதுவிலக்கு கூடுதல் துணைக் கமிஷனர் சுகுமாறன் தலைமை வகித்தார். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். டாஸ்மாக் மீது ஜமாத் ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கோர்ட் தீர்ப்புக்கு கட்டுப்படுதல்; தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடந்த இருந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்யப்பட்டது. அண்ணாநகர் உதவி கமிஷனர் வானமாமலை, டாஸ்மாக் உதவி மேலாளர் ராஜாங்கம், த.மு.மு.க.,மாவட்டத் தலைவர் சிக்கந்தர், பொருளாளர் அப்துல் ரபி, நகர் தலைவர் ஷேக் இப்ராகிம் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக