மனிதநேய மக்கள் கட்சி மட்டுமன்றி, திமுக கூட்டணிக்காக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஏதிராக களமிறங்கியுள்ளது ததஜ எனப்படும் தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத். இவர்கள் சில தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களையும் ஆதரிக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக அல்ல. மாறாக அந்த வேட்பாளர்கள் கருணாநிதியின் ஆதரவு பெற்றவர்கள் என்பதற்காகவே. இவர்களின் இந்த முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை இன்றைக்கு சமுதாயம் விமர்சிக்கும் போது ஒரு அறிவுப்பூர்வமான[?] வாதத்தை முன்வைக்கிறார்கள். அதாவது 'நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வாறேன், ரெண்டு பேரும் ஊதி ஊதி தின்போம்' என்ற பழமொழி நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான்.
அதைப்போல ஒரு முட்டாள்தனமான வாதத்தை வைக்கிறது இந்த தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத். அதாவது இவர்கள் மமகவை ஆதரிக்க வேண்டுமென்றால், ''தமுமுகவினரும் எங்களோடு இணைந்து கீழ்க்கண்ட தொகுதிகளில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க களமிறங்க வேண்டும். அத்தோடு அவர்கள் போட்டியிடும் கூட்டணி மட்டுமல்லாது திமுக கூட்டணியுள்ள முஸ்லிம் வேட்பாளர்கள், எஸ்டிபிஐ நிறுத்தியுள்ள முஸ்லீம் வேட்பாளர்கள் மற்றும் இதர கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிப்போம் எனவும், அது தவிர மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக கூட்டணியை மமக ஆதரிக்கும் எனவும் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டால் அடுத்த விநாடியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் போட்டியிடும் அதிமுக, திமுக, மமக, எஸ்டிபிஐ மற்றும் இதர கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்கும் என்ற அறிக்கை பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அனைத்து தொலைகாட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அத்தோடு அதிமுக திமுக முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் மமக, எஸ்டிபிஐ வேட்பாளர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் சளைக்காமல பாடுபட்டு அவர்களை வெற்றிப்பெறச் செய்வார்கள்''. என்று கூறுகிறது இந்த தக்லீத் ஜமாஅத்.
இதன் மூலம் நாங்கள் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் மமக தான் தயாரில்லை என்ற தோற்றத்தை உண்டாக்க முயல்கிறது தக்லீது ஜமாஅத். இவர்களின் இந்த அறிவிப்பின் மூலம் தங்களுக்கும் அறிவிற்கும் எக்கச்சக்க தூரம் என்று காட்டி விட்டார்கள். ஆனால் உண்மை என்னவெனில்,
மமகவிற்கும் தக்லீது ஜமாத்திற்கும் வேறுபாடு உண்டு.
மமக என்பது அரசியலில் போட்டியிடும் கட்சியாகும். அக்கட்சி அதிமுகவில் மூன்று தொகுதிகளை பெற்று கூட்டணி உடன்பாடு செய்து பெற்றுள்ளது ஏனைய 231 தொகுதிகளிலும் அதிமுகவை ஆதரிக்கவேண்டும். அத்தொகுதிகளில் முஸ்லிம்கள் போட்டியிட்டாலும் சரியே!அதுதான் கூட்டணி மற்றும் ஒப்பந்த தர்மமாகும். எனவே இந்த தக்லீது ஜமாஅத் கூறுவது போன்று மமக, பிற கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க முடியாது. இதுதானே எதார்த்தம்.
ஆனால் தக்லீது ஜமாஅத் அரசியல் கட்சியல்ல. கருணாநிதியிடம் பகிரங்கமாக சீட்டு வாங்கவில்லை. கூட்டணி ஒப்பந்தம் செய்யவில்லை. எனவே முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரையும் அந்த அமைப்பு ஆதரிக்க முடியும். முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் நீங்கலாக ஏனைய தொகுதிகளில் தான் திமுகவுக்கு ஆதரவு என தக்லீது ஜமாஅத் கூறினால் கருணாநிதியால் ஒன்றும் செய்யமுடியாது. தக்லீது ஜமாஅத்திற்கு சொந்த மூளை இல்லையென்றால், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அரசியல் நிலைப்பாட்டை பார்த்த பின்பாவது புரிந்திருக்கவேண்டும். எனவே தக்லீத் ஜமாஅத் மமக வை ஆதரிக்க வைக்கும் நிபந்தனை என்பது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவது போலாகும். இதன் மூலம் சமுதாயத்தில் மமகவை ஒற்றுமையை விரும்பாதவர்களாக அடையாளம் காட்டவும், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றவும் தக்லீது ஜமாஅத் செய்யும் நாடகமாகும். எனவே மக்கள் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து தக்லீத் ஜமாஅத்தின் கோரிக்கையை குப்பைக்குத் தள்ளி, மமக மட்டுமல்ல அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
-அப்துல் முஹைமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக