இந்த தேர்தலில் சர்வாதிகார,பாசீச கொடுங்கோல் திமுக ஆட்சி தூக்கி எறியப்பட்டு அதிமுக ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும். நமது கூட்டணியில் தற்போது கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் இணைந்து மிகப்பெரிய கூட்டணியாக திகழ்கிறது.
திமுகவினர் பணம் தந்து தமிழக மக்களிடம்வாக்குகளை பெற முயற்சி செய்கின்றனர்.
அவர்களை ஓட,ஓட விரட்டி அடித்து நமது கூட்டணி வெற்றி பெற செய்யுங்கள் என பேசினார். இவரது ஆங்கில பேச்சினை மாநில துணை செயலாளர் சி.மகேந்திரன் தமிழாக்கம் செய்தார்.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பனர் லிங்கம், எம்.எல்.ஏ.ராமசாமி, முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், தொகுதி செயலாளர் சிந்துமுருகன், மார்க்சிஸ்ட் சார்பில் அர்ஜூனன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தொகுதி இணை செயலாளர் முத்துசாமி, நக்கமங்கலம் கிளை செயலாளர் காளிமுத்து, நகர செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் சேதுபாண்டியன், தேமுதிக சார்பில் ஜப்பான் பாலமுருகன், மற்றும் புதிய தமிழகம்,சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், முஸ்லீம் லீக் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
முடிவில் வேட்பாளர் வி.பொன்னுபாண்டியன் தனக்கு ஆதரவு கேட்டு பேசி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக