
சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, ஒரு விமானத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 86 பேரும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.
ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட `ஸ்பைஸ் ஜெட்' விமானம் நேற்று செவ்வாய் பகல் 11.55 மணிக்கு சென்னை வந்தது. 5 சிப்பந்திகள் உள்பட 86 பயணிகள் விமானத்தில் இருந்தனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கி ஓடுபாதையில் சென்றபோது, விமானத்தின் பின் பக்க டயர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் அந்த விமானம் அதிர்ச்சியில் குலுங்கியது. உள்ளே இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். ஆனால், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்புடன் நிறுத்தினார்.
ஆகையால் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் பிழைத்தனர். விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்ட அவர்கள், வாகனம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக