சனி, 11 ஜூன், 2011

சட்டப்பேரவையில் முழங்கிய இஸ்லாமிய தமிழன்



மனித நேயமக்கள் கட்சி மக்களுக்காக சட்டப்பேரவையில் முழங்கியஉரைகளின் தொகுப்பு
மனித நேய மக்கள் கட்சித்தலைவர் பேரா டாக்டர் எம் ஹெச்ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சட்டப் பேரவையில் ஆற்றிய உரைகளின்தொகுப்பு

கச்சதீவை மீட்கவேண்டும்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தலைமையிலான தமிழக அரசுதொடக்கத்திலிருந்தே மீனவர்களுடைய நலனைப் பேணுவதிலே அக்கரைகொண்டு பல்வேறு அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது. அந்த அப்படையில் 1974&ல் தமிழகத்தில் திமுக அரசும், மத்தியிலேகாங்கிரஸ் அரசும் ஆட்சியிலே இருந்தபோது காலங்காலமாக இராமநாபுரம்சேதுபதி மன்னருக்குச் சொந்தமான இருந்து விடுதலைப் பெற்று பிறகு நமதுநாட்டின் சொத்தாக மாறிய கச்சச் தீவை தாரை வார்த்துவிட்டார்கள். எனக்குமுன்னர் இங்கே உரையாற்றிய மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்டதைப்போல, கச்சத்தீவுவை தாரை வார்த்து நம்முடைய தமிழக மீனவர்களுக்கு குறிப்பாகஇராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக...


முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் :

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அன்றாடம் நம்முடையமீனவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடிய ஒரு பிரச்சினை, கச்சத் தீவை தாரைவார்க்கும் பிரச்சினையாக அமைந்திருக்கின்றது இதில் மிகமுக்கியமாக ஒரு விஷயத்தை மட்டும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். கச்சத் தீவு தொடர்பான சட்டத்திலே கச்சத் தீவுக்கு செல்வதற்கும், அந்தபகுதியிலே மீன் பிடிப்பதற்கும் ஏன் அந்தத் தீவிலே மீன் வலைகளை காயவைப்பதற்கும்கூட தாரை வார்த்தச் சட்டத்திலே உரிமை இருந்தாலும் கூட, இலங்கையிலே தமிழ் மக்களுக்கு எதிரான போர் நடைபெற்றிருந்த காலத்திலேல் தமிழ்நாடு என்ற ஒரு சட்டத்தின் வாயிலாக நம்முடைய மாற்றுப்பட்டுகச்சத் தீவுக்கு நாம் செல்லக்கூடிய உரிமை தடுக்கப்பட்ட ஒரு சூழல்ஏற்பட்டுவிட்டது.
இப்போது போர் முடிவுற்ற நிலையிலே இந்தச் சட்டத்தையும் திருத்திநம்முடைய மீனவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசுநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்லி, தமிழக அரசு கொண்டுவந்துள்ளஇந்த தீர்மானத்தை மனதார ஆதரித்து விடைபெறுகிறேன். நன்றி (மேசையைத்தட்டும் ஒலி)
1983&

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும்போது

முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் :

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய இறைவனின் திருப்பெயரால்தொடங்குகின்றேன். ஊழல் மலிந்த, அராஜகம் நிறைந்த, சுயநல ஆட்சியைவீழ்த்த அனைத்துத் தரப்பினரையும், ஒருங்கிணைத்து மக்கள் விரும்பியகூட்டணியை அமைத்து மக்களின் மௌனப் புரட்சிக்கு வித்திட்டு, நடந்து முடிந்தசட்டப்பேரவைத் தேர்தலிலே வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுதற்போது 3&வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும்மாண்புமிகு தமிழக முதல்வர் எங்கள் அன்பு சகோதரிக்கும் (மேசை தட்டும் ஒலி) அவரது தலைமையின் கீழ் செயல்படும் இலட்சோபலட்ச அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், எனதுவாழ்த்துக்களையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக்கொள்வதில்மகிழ்ச்சியடைகிறேன்.தமிழகத்தில், ஜனநாயத்தைக் காப்பாற்றும் இந்தஅறப்பணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழககூட்டணியில் இடம் பெற்ற எங்கள¢கூட்டணிக் கட்சிகளான தேசிய முற்போக்குதிராவிடக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்தியபார்வர்டு பிளாக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர்முன்னணிக் கழகம் ஆகியவற்றின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் நலனுக்கெதிரான கூட்டணியைதோல்வியுறச் செய்யவேண்டுமென்று வீறுகொண்டு எழுந்து செயல்பட்ட நாம்தமிழர் கட்சியின் தலைவர் சகோதரர் சீமானுக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
மிரட்டல்கள், இழிசொற்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு நடுநிலையுடன்செயல்பட்டு தமிழகத்தின் ஜனநாயகம், பணநாயகமாக மாறாமல் தடுத்து நிறுத்திஅதைத் தடுத்து நிறுத்துவதையே ஒரு சவாலாகவே கருதி மனஉறுதியுடன்செயல்பட்ட தலைமை தேர்தல் ஆணையாளர் குரேஷி அவர்களுக்கும், திரு.பிரவின்குமார் தலைமையிலான தமிழக தேர்தல் ஆணையத்தின் அத்துணைஅதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.அனைத்து வகையான கணிப்புகளையும்தவிடுபொடியாக்கி சுயநலனை விட நாட்டு நலனே மேல் என்பதை நெஞ்சில்சுமந்து தங்கள் கையில் உள்ள எனும் வாக்குச்சீட்டுகளை களாக மாற்றிசமீபத்தில் எகிப்தில் நடைபெற்றுதுபோல ஒரு அமைதிப் புரட்சியைதமிழகத்திலும் ஏற்படுத்தி நல்லாட்சி ஏற்ற்ட வழிவகை செய்த தமிழகவாக்காளப்பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
16 ஆண்டுகளுக்கு மேலாக தன்னலம் பாராமல் அளப்பரிய தியாகங்களுடன்மனிதநேய சேவைகளைச் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்கண்மணிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற அயராதுஉழைத்த என் கட்சியின் சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
நான் போட்டியிட்ட இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றதேர்தல் உலகின் பல்வேறு பகுதிகளிலே வாழும் தமிழர்களின் கவனத்தைஈர்த்துவிட்டது. ஈழ மண்ணில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷே என்நண்பர் என்று தன்னைச் சொல்வதிலே பெருமை கொள்ளும் ஒருவர் காங்கிரஸ்கட்சியின் சார்பாக எனக்கு எதிராகக் களம் இறக்கப்பட்டார். அவர் மட்டும் அல்ல, காங்கிரஸ் கட்சியும் கூட ராஜபக்ஷேயின் நண்பராகத்தான் இருந்து வருகிறது. இதனால் தான் டெல்லியில் நடைபெற்ற ஊழல் மலிந்து போட்டிகளின் நிறைவுவிழாவிற்கு ராஜபக்ஷேவிற்கு சிவப்புக் கம்பன வரவேற்பு அளித்தார்கள். அந்தசிவப்புக் கம்பளம் என் தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் அடையாளமாகத்தான்எனக்குக் காட்சியளித்தது.


காங்கிரஸ்
கட்சியின் ராஜபக்ஷே ஆதரவை நிராகரித்து அவரது நண்பரானகாங்கிரஸ் வேட்பாளருக்கு சரியான பாடம் கற்பித்து என்னைப் பெருவாரியானவாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற வைத்த இராமநாதபுரம் தொகுதிவாக்காளப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
என் வெற்றிக்காக அரும்பாடுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றி, நடந்து முடிந்த இந்த 14 வது சட்டப்பேரவைக்கான இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பைஏற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசிடம்மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளைநிறைவேற்றும் வகையில் துடிப்புடனும், கோபத்துடனும், விவேகத்துடனும்இந்த புதிய அரசின் ஆரம்பக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதை மனிதநேயமக்கள் கட்சி வரவேற்கிறது.
அருமையான 6 மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்த ஆட்சிதொடங்கியுள்ளது. அனைவரையும் அரவணைக்கும் வகையில் தமிழகத்தின்ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு ளுநர் உரையும்வழங்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களைநிறைவேற்றுவதற்கான வழிவகை ஆளுநர் உரையிலே இடம்பெற்றுள்ளது. அதை மனிதநேய மக்கள் மனமார வரவேற்கிறது.


கடந்த
அரசு அவசரக் கோலத்தில் நடைமுறைப்படுத்திய சமச்சீர் கல்விக்கொள்கையை மேல் ஆய்வுக்காக இந்த அரசு நிறுத்தி வைத்துள்ளதை மனிதநேயமக்கள் கட்சி வரவேற்கிறது. சிறுபான்மை மக்களின் மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை அந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்து 10 வது மற்றும் ப்ளஸ்2 &விலே தேர்வு எழுதும் வாய்ப்பை திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி முறையிலே மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக பழுத்தகல்வியாளர் முத்துக்குமரன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைபுறந்தள்ளப்பட்டது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறைமேல் ஆய்வு செய்யப்படும்போது அரசியல் சாசன சட்டம் சிறுபான்மைமக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறுபான்மைமக்கள் தமிழுடன் சேர்த்து தாய் மொழியை கற்பதற்கும், தேர்வு எழுதி மதிப்பெண்பெறுவதற்கும் வழிவகுக்கப்பட வேண்டும் என்று அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.அதேநேரத்தில் சிறுபான்மை மக்களின் நலனின் அக்கறைகொண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது திருச்சி, வேலூர், பரமக்குடி என்றுபல்வேறு ஊர்களிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்திலேமுஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க புதியமுயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார். சிறுபான்மைமுஸ்லிம்களின் இந்த உள்ளக்கிடக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும்என்று கேட்டுக்கொள்கிறேன்.


அதேபோல
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில்முறையில் உள்ள சிக்கல்களினால் அதன் பலனை சில துறைகளில் குறிப்பாகஉயர் மருத்துவ படிப்பு சேர்க்கை, பல்ககலைக்கழகங்களிலே பேராசிரியர்நியமனம் முதலியவற்றில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான நியாயமானவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.இந்த குளறுபடிகள் நீக்கப்படுவதற்கும், நவிந்தோர் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள இந்த அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பிற்படுத்தப்பட்டமுஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அமலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு குழுஅமைக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல்பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டார்கள். இதற்கான அறிவிப்பும் விரைவில்வெளியிடப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.


கடந்த
திமுக அரசு 2009 லே தமிழ்நாடு திருமணங்கள் புதிவுச் சட்டம் என்றபெயரில் கட்டாயமாக திருமணங்கள் அனைவரும் புதிவு செய்யும் சட்டத்தைநிறைவேற்றியது. காலம் காலமாக முஸ்லிம்களின் திருமணங்கள்எழுத்துபூர்வமாக அதனை நடத்தும் ஜமாத்துகளில் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. ஆனால், திமுக அரசு இந்தத் திருமணங்களைப் பதிவு செய்யகட்டாயத் திருமணப் பதிவு சட்டத்தில் கொண்டு வந்து விதிமுறைகள், முஸலிம்தனியார் சட்டத்திற்கு முரணாக இருந்தன, தமிழகத்தில் உள்ள அனைத்துமுஸ்லிம் அமைப்புகளும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.சென்ற 2010, மார் 6&ம் தேதி நாள் உள்பட அனைத்து முஸ்லிம்கள் அமைப்புகளின் பிரதிநிகள்சட்ட அமைச்சரைச் சந்தித்து, கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தில்முஸ்லிம்களுக்கு உள்ள ஆட்சேபணைகளை வெளிப்படுத்தினோம். ஆனால், அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை சென்ற திமுக அரசுநிராகரித்தது. தேர்தலிலே படுதோல்வி அடைந்தது.அரசினால் திருமணங்கள்பதிவு செய்யப்படுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. மாறாக, இந்தப்பதிவிற்காக முந்தைய திமுக அரசு கொண்டுவந்த விதிமுறைகளைத்தான்முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். ஜமாத்துகள், காஜிகள் பதிவு செய்யும் திருமணம்தொடர்பான பதிவுச் சான்றினை அப்படியே ஏற்றுக்கொண்டு வேறு எவ்விதகுறிப்பாவணங்களும் இல்லாமல் பதிவு துறை பதிவு செய்து, சான்றிதழ் வழங்கவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கையாகும். அதாவது தமிழ்நாடுதிருமணங்கள் பதிவுச் சட்டம் 2009 விதிமுறைகளிலே பிரிவு&5, உட்பிரிவு&4லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமுதாயமக்களின் கோரிக்கை, இந்தக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்று, இதைஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றித் தருவதாக மாண்புமிகு முதலமைச்சர்அவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்கள். இந்தக் கோரிக்கையைஅவர்கள் விரைவில் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் குழு சார்பாக ஹஜ் செல்வதற்கு (குறுக்கீடு)


முனைவர்
எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் : மிக்க நன்றி, அமைச்சர் அவர்களே, இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் குழு சார்பாக ஹஜ் செல்வதற்கு 10400 பேர்விண்ணப்பித்தார்கள், இவர்களில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 3400 பேர்களுக்கு மட்டுமே குலுக்கல்மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாண்புமிகுமுதல்வர் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வாய்ப்பு இழந்த சுமார் 7000 பேரில் பாதி பேருக்காவது வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யவேண்டுமென்றுகேட்க்கொள்கிறேன்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல்பிரச்சாரத்தின்போது, குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலே பட்டாநிலங்களிலே சர்ச்சுகள், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு இருக்ககூடிய சிக்கலைஇந்த அரசு, அதிமுக அரசு நிவர்த்தி செய்யும் என்று குறிப்பிட்டார்கள். அதையும்நி¬வேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.என்னை சட்டமன்றத்திற்குஅனுப்பியுள்ள இராமநாதபுரம் தொகுதி மீனவர்கள் நிறைந்த தொகுதி, மீனவர்களின் நலனின் இந்த அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளதுஎன்பதற்கு எடுத்துக்காட்டாக, தொடக்கமாக இந்த அரசு தேர்தலிலே வாக்குறுதிஅளித்தபடி மீன்பிடி டைக் காலத்திற்கு வழங்கப்படும் உதவித் தொகையை மாதம்ஒன்றுக்கு ரூ.2000/& ஆக உயர்த்தியதை மணமார வரவேற்கிறேன்.கச்சத்தீவுதொடர்பாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் மீனவர்களின் நலனின் இந்தஅரசுக்குள்ள அக்கறைந வெளிப்படுத்துகிறது.இதே போல, பருவகாத்தால் நான்குமாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழலில் இருக்கும்மீனவக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4000 ரூபாயாக வழங்கப்படும்நிறைவேறும் என்று நம்புகிறேன்.


பாரம்பரிய
மீனவர்கள் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி நோக்கோடுநடுக்கடலில் மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் ஏற்றுமதிக் கப்பல்பூங்கா அமைக்கப்படும் என்று அஇஅதிமுக&வின் தேர்தல் அறிக்கையிலேகுறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா இராமநாதபுரம் தொகுதியில் விரைவில்அமைய ஆவண செய்ய வேண்டுமெனப் பணிவண்புடன்கேட்டுக்கொள்கின்றேன்.13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றுஅஇஅதிமுக&வின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மீன்பூங்காக்களில் குறைந்தது ஐந்து தொழில் வளர்ச்சயில் மிகவும்பிற்படுத்தப்பட்டபகுதிக்கு வழங்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக்கேட்டுக்கொள்கின்றேன்.அடுத்து தொடர்ந்து நம்முடைய தமிழக மீனவர்கள்தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும். அந்த வகையிலேதான்அஇஅதிமுக&வினுடைய தேர்தல் அறிக்கையிலே மீனவர் பாதுகாப்பு படைஅமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.அதை ஏற்படுத்துவதற்கும்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.இந்தசூ£லில் தேர்தல் நேரத்திலே நான்கு மீனவர்கள் £ரமேசுவரத்தை சேர்ந்தமீனவர்கள், விக்டஸ், அந்தோனிராஜ், ஜான்பால் மற்றும் மாரிமுத்து என்ற இந்தநான்கு மீனவர்களும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உலகக்கோப்பை கிரிப்கெட் போட்டி நடைபெற்ற அந்த தினத்திலே மீன் பிடிப்பதந்காகஜிழி-10-விதிஙி-626என்ற படகிலே சென்றிருக்கின்றார்கள்.கிரிக்கெட்போட்டியிலே இலங்கை தோல்வியடைந்தது. இலங்கை தோல்விஅடைந்ததற்குப் பழிவாங்ழுவதற்காக வேண்டி, நம்முடைய இந்த நான்குமீனவர்களும் சித்திரவதை வெய்யப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டிருக்கின்றார்கள். இதிலே, மிகப்பெரிய கவலை மிகப்பெரியவருத்தம் என்னவென்றால், இந்த செய்தி, 2 ஆம் தேதியே அவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள், அவர்களுடைய சடலத்தையும் இலங்கை கடற்படையினர்தூக்கிச் சென்றுவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து இந்த செய்தியை அன்றைதமிழக அரசு மறைத்து இந்த நான்கு மீனவர்களும் காணாமல் போய்விட்டார்கள்என்று சொல்லி சில நாட்களாகத் தேடி,பிறகு இலங்கையிலுள்ள ஒருபத்திரிகையிலே இரண்டு சடலங்கள் & விக்டஸினுடைய சடலமும், இன்னொருவருடைய சடலமும் ஒதுங்கியிருக்கின்றது என்றுசெய்திகளெல்லாம் வந்தபிறகு மீனவக் குழுக்கள் 6 பேர் கொண்ட குழுஇலங்கைக்குச் செல்கின்றது.


முனைவர்
எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் : அந்த குழுவும் சிஷீணீst நிuணீக்ஷீபீகப்பலிலேயே சுடும வெயிலிலே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அழைத்துச்செல்லப்பட்டார்கள். இதற்குப் பிறகு விக்டஸினுடைய உடல்யாழ்ப்பாணத்திலேயே கண்டெடுககப்படுகின்றது. அதிலே பல காயங்கள், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த மறு தினம், அந்தோனிராஜினுடைய உடல்தமிழகத்திலே தொண்டிக்கு அருகே கரை ஒதுங்குகிறது. தேர்தல் முடிந்தமறுநாள் 14 ஆம் தேதி ஜான் பாலினுடைய உடல் கரை ஒதுங்குகிறது. 16 ஆம்தேதி மாரிமுத்துவினுடைய உடல் தலை இல்லாமல் கரை ஒதுங்குகிறது. இதிலே மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மீனவர்கள் காணாமல் போனால் அவர்களுடைய உடல் கிடைத்தால் மட்டுதான்அரசாங்கம் அவர்களுடைய குடும்பத்திற்கு இழப்பீடு தரக்கூடியதொருநிலையிலே, இந்த நான்கு மீனவர்களில் ஒருவருடைய உடல், விக்டஸினுடையஉடல் யாழ்ப்பாணத்திலே கண்டெடுக்கப்பட்ட பிறகு நான்கு குடும்பங்களுக்கும்தமிழக அரசு அன்றை தமிழக அரசு இழப்பீடு கொடுக்கின்றது. இதிலே நமக்குள்ளசந்தேகம் என்னவென்றால் தேர்தல் நேரத்திலே இந்த நான்கு மீனவர்களையும்கிங்களப் பேரினவாத இலங்கை அரசு கிரிக்கெட் உலகக் கோப்பைப்போட்டியிலேதோல்வியடைந்தற்காகச் சுட்டுக் கொன்றிருக்கிஙனறது. சித்திரவதை செய்துகொன்றிருக்கிறது. இந்த உண்மைய மறைத்திருக்கின்றார்கள். இதற்காக தமிழகஅரசு முழமையான ஓர் விசாரணையை ஏற்படுத்தி இந்த நான்குமீனவர்களினுடைய (குறுக்கீடு)


முனைவர்
எம் ஹெச் ஜவாஹிருல்லா " இது வேறு அது வேறு இந்த 4 மீனவர்களுக்கும் அதிமுக சார்பாக ஒரு லட்சம் கொடுத்தார்கள் .ஆனால் இந்தசம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையும் இந்த உண்மையைமறைத்தவர்கள் மீதான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டுமெனகேட்டுக்கொள்கிறேன் .அதே போல் கடந்த 30 ஆண்டுகளாக 500 க்கு மேற்பட்டதமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் சித்திரவதை செய்யப்பட்டுகொல்லப்பட்டிருக்கிறார்கள்.அவாகளுடைய குடும்பத்தின் வாரிசுகளுக்கும்அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டிஇந்த 4 மீனவர்களும் சென்ற படகு என்ன ஆனது என்பதைப்பற்றிய விவரம் இதுவரை தெரியவில்லை அந்த படகுக்காக வேண்டி தமிழக அரசு இழப்பீடுதரவேண்டும் . இந்த 4 குடும்பங்களினுடைய உறுப்பினர்களுக்கு அரசு வேலைதருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்த நேரத்திலேகேட்டுக்கொண்டு இறுதியாக சுருக்கமாக சில செய்திகளை மட்டும் சொல்லிகோரிக்கைகளை மட்டும் முன் வைத்து விடை பெறுகின்றேன் .


இராமநாதபுரம்
மாவட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளாகிவிட்டது . ஆனால்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற க்கழகத்தினுடைய நிறுவனர் , ஏழைகளின் பங்காளர் ,பாரத ரத்னா எம்ஜி ஆர் அவர்களுடைய காலத்திலேயேதான் இராமநாத புரம்மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகமும்இராமனாதபுரத்திலே அமைக்கப்பட்டது.(மேசையை தட்டும் ஒலி) இந்தஇராமநாத புரம் மாவட்டம் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய இந்த மாவட்டத்தைஎம் ஜி ஆர் அவர்கள் உயிர்பித்தார்கள்.அதற்கு சரியான மாவட்டத்தலைநகர்அந்தஸ்து கொடுத்தார்கள் இந்த ஆட்சியிலே மிகவும் பிற்படுத்தப்பட்ட தொழில்வளம் இல்லாத விவசாயமும் அதிகம் இல்லாத இந்த மாவட்டத்தைதமிழகத்தையே எப்படி இந்தியாவினுடைய முன்னோடி மாநிலமாகஆக்கவேண்டுமேன்று அதிமுக அரசு முயற்சி செய்திருக்கிறதோ அதே போலஎங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தை தமிழகத்தில் மிகவும் முன்னோடியானமாவட்டமாக உருவாக்குவதற்கு இந்த அரசு.


முனைவர்
எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் ; ,இராமநாதபுரம் பாதாள சாக்கடைதிட்டம் முடிக்கப்பட்டிருக்கின்றது. இராமேஸ்வரத்திலே யாத்ரிகர்களும், சுற்றுல்லாப் பயணிகளும் ஏராளமாக வருகின்றார்கள். அதற்கு அடிப்படைகட்டமைப்பு வவசதிகள் அளிக்கப்பட வேண்டும். இராமநாதபுரத்திலே சென்றஅரசு பெயரளவிலே மருத்துவக் கல்லூரி தொடங்கியதாக அறிவிப்பு மட்டும்செய்தது. வேறு எந்த நடவடிக்கையும் இல்லை. அதுவும் தொடர வேண்டும். இராமநாதபுரத்திலே ஓடக்கூடிய போக்குவரத்துக் கழகத்தினுடையதலைமையகம் கும்பகோணத்திலே இருக்கின்றது. அந்தக் கோட்டம்கும்பகோணத்திலிருந்து காரைக்குடிக்கு மாற்ற வேண்டுமென்றுகேட்டுகொண்டு நல்ல வாய்ப்பைத் தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துவிடைபெறுகின்றேன்.அதற்கு விளக்கமளித்த வணிகவரி மற்றும் பதிவுத்துறைஅமைச்சர் எஸ் கோகுல இந்திரா உறுப்பினர் பேசும்போது இஸ்லாமியர் சிலகோரிக்கைகளை திருமண பதிவு சம்பந்தமாக கூறியிருக்கின்ர்ரர்கள்புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தேர்தல் நேரத்தில் அதைப்பற்றிவிளக்கமாக சொல்லி வாக்குறுதியில் சொல்லியுள்ளதாகசொல்லியிருக்கின்றார்கள்..உறுப்பினர் அந்த கோரிக்கைகளை விளக்கமாகஎங்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் நிச்சயமாக புரட்சித்தலைவிஅம்மா அவர்கள் உடனடியாக அதற்குரிய (மேசையை தட்டும்ஒலி)நியாயப்படுத்தப்பட்ட அவர்களுடைய கோரிக்கையை சிறுபான்மைமக்களுக்கு பாதுகாவலராக சாதி பாராத நீதி மானாக இதுவரை விளங்ககூடியமுதலமைச்சர் அம்மா அவர்கள் உடனடியாக அதற்குள்ள ஆய்வுகள் செய்துநிவாரணமும் அவர்களுக்குள்ள அந்த கோரிக்கையும் நிச்சயமாகநிறைவேற்றப்படும் என்றார். .

நன்றி : azeez ..எஸ் @யாஹூ.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமுமுக துபை மண்டலம் Headline Animator

LinkWithin

Related Posts with Thumbnails

குர்ஆனை அனைத்து மொழிகளிலும் படிக்க

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!