சனி, 13 ஆகஸ்ட், 2011

காஷ்மீர் மறைக்கப்படும் உண்மைகள் தொடர் 2



நேரடியாக ஜம்மு செல்ல ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆக்ரா வரை மட்டுமே
டிக்கெட் கிடைத்தது. ஆக்ராவிலிருந்து ஜம்முவுக்கு அன்று மாலை வேறு ஒரு ரயிலில்
டிக்கெட் எடுத்திருந்தோம். ஆனால் அது கன்பார்ம் ஆகாமல் இருந்தது.




சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 18 அன்று இரவு 10 மணிக்கு ரயில் புறப்பட்டது.
எங்களோடு இப்பயணத்தில் அதே நிகழ்வில் பங்கேற்க வழக்கறிஞர்கள் ஜெய்னுலாபுதீன்,
வாசுதேவன், புகைப்பட நிபுணர் சந்திரன் ஆகியோரும் வந்தனர்.

எங்கு செல்கிறோம்? உலகில் மிகவும் பதட்டமான பகுதிகளில் ஒன்றான
காஷ்மீருக்கல்லவா........ போகிறோம். அடிக்கடி துப்பாக்கி சூடுகள், சில
சமயங்கள் குண்டு வெடிப்புகள், அரசுப் படைகளும், ஆயுத குழுக்களும் மோதிக்
கொள்ளும் நிகழ்வுகள், யாரையும் சுட்டுக் கொள்ளலாம் என அனுமதி பெற்ற அரசுப்
படைகள், காவல் நிலைய மரணங்கள், ஆயுதக் குழுக்களின் துப்பாக்கி சூடுகள், மனித
உரிமை மீறல்கள் என சகல அபாயங்களும் நிறைந்த ஒரு பகுதிக்கல்லவா......
பயணிக்கிறோம்!

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கவலைகளும், அறிவுறைகளும் எங்கள் மனதை
சூழ்ந்து நிற்க எமது பயணம் புறப்பட்டது.

இரவு முழுக்க ஆந்திராவில் ஓடிய ரயில் காலை நாங்கள் கண்விழித்தபோது
மஹாராஷ்டிராவில் ஓடிக் கொண்டிருந்தது. தென்மேற்கு பருவமழைக்காலம் என்பதால்
மழையில் நனைந்த வயல்களையும், மழைச் சாரல்களையும் ரசித்துக் கொண்டே சென்றோம்.

இப்பயணத்தில் இந்திய விடுதலை போராட்டத்தின் முதன்மை தலைவர்களுடன் ஒருவரான
அபுல்கலாம் ஆசாத் எழுதிய India wins Freedom என்ற நூலை நான் முழுமையாக படிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

எங்களோடு ஆக்ராவுக்கு காலணி வணிகம் தொடர்பாக கொள்முதல் செய்ய மண்ணடியை
சேர்ந்த இரு சகோதரர்களும் பயணித்தனர். இரவு மஹ்ரிபுக்கு பிறகு ரயில் மத்திய
பிரதேசத்தில் நுழைந்தது. குவாலியர், ஜான்ஸியை தொடர்ந்து உ.பி.க்குள்
நள்ளிரவில் பயணம் தொடர்ந்தது. விடியற்காலை பாங்கு சப்தம் கேட்ட அதிகாலையில்
ஆக்ராவில் இறங்கினோம்.
(இடையில் ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இக்கட்டுரை முடிந்த பிறகு
தனிக்கட்டுரை ஒன்று எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்)
அன்று மாலை எங்களது ஆக்ரா -----------ஜம்மு ரயில் டிக்கெட் காத்திருப்போர்
பட்டியலில் இருந்ததால் மாலை 5 மணி ரயிலில் பயணிக்க முடியவில்லை.

மாலை 7 மணியளவில் டெல்லி செல்லும் ஒரு பேருந்தில் நெரிசலில் சிக்கியபடியே ஏறி
அமர்ந்தோம். விடியற்காலை 2 1/2 மணியளவில் டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் என்ற பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்.

அங்கு நேரடியாக ஜம்மு செல்வதற்கான பேருந்துகள் இந்த நேரத்தில்இல்லையென்றார்கள். பஞ்சாப் மாநிலம் பதான் கோட் என்ற நகருக்கு 3 மணிக்கு ஒருபேருந்து நின்றது.

அதுதான் பஞ்சாபின் எல்லை. அங்கிருந்து சில கிலோ மீட்டர்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடங்கிவிடும். இரண்டு மணி நேரத்தில் பதான் கோட்டிலிருந்து இரண்டு மணி நேரத்தில் ஜம்மு நகருக்கு சென்றுவிடலாம் என்றார்கள். ஏற்கனவே ஆக்ராவிலிருந்து மோசமான பேருந்தில் வந்ததால் மிகுந்த களைப்புற்றிருந்தோம்.
இப்போது பதான் கோட் செல்லும் பேருந்தை பார்த்தால் 10,15 வருடங்களுக்கு
முன்னால் தமிழகத்தில் இருந்த பேருந்துகளின் ஞாபகம்தான் வந்தது.

வேறு வழியின்றி ஏறி உட்கார்ந்தோம். படு வேகமாக வண்டி புறப்பட்டது. தமிழகமே
ஆவலோடு கவனித்துக் கொண்டிருக்கும் திஹார் சிறையில் வழியே புறப்பட்டு
ஹிமாச்சல் பிரதேசத்திற்குள் வண்டி நுழைந்தது. ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளை கடந்து காலையில் பஞ்சாபுக்குள் நுழைந்தோம்.

இமயமலையில் உருவாகும் வற்றாத ஐந்து நதிகள் பாய்வதால் இதற்கு பஞ்சாப் என்று
பெயர் வந்ததது. வழியெங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மழை
காலங்களில் பசுமையாக இருப்பது போன்ற வயல்களின் காட்சிகளை இங்கு பார்த்தோம்.எங்கும் பரவலாக சீக்கிய மக்கள். ஆங்காங்கே நதிகள் ஓடும் கால்வாய்கள்! விவசாயம்
மட்டுமல்ல, தொழில்களும் நிறைந்த மாநிலம் அது.

இடையில் படையெடுப்பது போல பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்த சட்லெஜ் நதியை
பார்த்தோம். இவையெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்தவை.
ரயிலில் வந்திருந்தால் முக்கிய நகரங்களையும், முக்கிய காட்சிகளையும்
பார்த்திருக்க முடியாது. காரணம் பெரும்பாலும் ரயில்கள் ஊருக்கு வெளியேதான்
ஓடும்!

சிறிது நேரத்தில் புகழ்பெற்ற லுதியானா, நகரை கடந்தோம். தையல் மெஷின்கள்
தயாரிப்பு, டிராக்டர்கள் தயாரிப்பு, ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு என லூதியானா
பஞ்சாபிகள் வர்த்தக நகரங்களில் ஒன்றாகும்.

1980 களின் தொடக்கத்தில் சீக்கியர்கள் பஞ்சாபை தனிநாடாக்கி சுதந்திர
காலிஸ்தான் என்ற முழக்கத்தை முன் வைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்தினர்.
அப்போது எண்ணற்ற சீக்கிய இளைஞர்கள் ரத்தம் சிந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.
காலை 11 மணிவாக்கில் ஜலந்தர் நதரின் முக்கியப் பேருந்து நிலையத்திற்கு
வந்தோம். ‘தியாகிகளின் தலைவர்’ பகத்சிங் பேருந்து நிலையம் என அதற்கு
பெரிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டுக்கு மருதநாயகம், கட்டபொம்மன் போல
பஞ்சாபியர்களின் பெருமைக்குரிய விடுதலை நெருப்பு பகத்சிங் என்பதை அனைவரும்அறிவோம்.

மதியம் 4 மணி அளவில் பதான்கோட் வந்து சேர்ந்தோம். அங்கேயே எங்களது பரபரப்பு
தொடங்கியது. நிறைய ராணுவ வாகனங்கள். ராணுவ வீரர்கள் என இந்தியாவின்
தலைப்பகுதிக்குரிய பாதுகாப்பு அம்சங்கள் தெரிந்தது.

சற்று நேரத்தில் அதே போன்ற இன்னொரு பழைய பேருந்து ஜம்மு செல்ல நின்றுக்
கொண்டிருந்தது. ஆக்ராவில் தொடங்கிய ‘டப்பா’ பேருந்து பயணம் மீண்டும்
தொடர்ந்தது. ஓய்வே இல்லை. எல்லோரும் சோர்ந்து விட்டோம்.

எங்களோடு ரயிலில் ஹாரூன் வரவில்லை. காரணம் அவர் வணிக நிமித்தமாக முன் கூட்டியே
புறப்பட்டு குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு சென்றிருந்தார்.

அங்கிருந்து டெல்லி வழியாக ஜம்முவுக்கு விமானத்தில் வருவதாக சொல்லியிருந்தார்.
அதன் படியே ஜம்முவுக்கு அப்போதுதான் வந்து இறங்கி, தான் ஜம்மு பேருந்து
நிலையத்தில் நிற்பதாகவும் இங்கு Postpaid செல்போன்கள் மட்டுமே இயங்குவதாக கூறி தனது Prepaid செல்போன்கள் இயங்கவில்லை என்றார்.

பிறகு ஜம்மு பேருந்து நிலையத்தில் ஒரு பெட்ரோல் அருகில் நிற்பதாகவும், அந்த
இடத்திற்கு வந்துவிடும்படி கேட்டுக் கொண்டார்.

எங்களுக்கு சின்ன கவலை தொற்றியது. புரியாத, பரபரப்பான ஒரு நகரில் செல்போன்
தொடர்பற்ற நிலையில் அவரை எங்குபோய் தேடுவது என யோசித்தோம்.

மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஜம்மு போய் சேர்ந்ததும், அவரை அதே இடத்திற்கு சென்று சந்தித்துக் கொண்டோம்.



(பயணம் தொடரும்....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமுமுக துபை மண்டலம் Headline Animator

LinkWithin

Related Posts with Thumbnails

குர்ஆனை அனைத்து மொழிகளிலும் படிக்க

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!