ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம் முன்னேற்றக் கழக ஷார்ஜா மண்டலம் கடந்த 13.08.2010 அன்று மாலை ஷார்ஜாவிலுள்ள தூர கிழக்கு பிலிப்பைன்ஸ் ( FAR-EAST PHILIPPINES SCHOOL) பள்ளியில் ரமளானை வரேவேற்க்கும் விதமாக “ரமலான் சிறப்பு மாநாட்டை நடத்தியது”.
பள்ளியின் அரங்கத்தில் சரியாக மாலை 4.00 மணிக்கு சகோ. தோப்புத்துறை இப்ராஹிம் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சிகள் ஆரம்பம்மானது. மாநாட்டிற்க்கு ஷார்ஜா மண்டல தலைவர் சகோ. நெல்லிக்குப்பம் இக்பால், மண்டல பொருளாளர் அபுல் ஹஸன், பூலாங்கால் சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமீரக மண்டல துனை தலைவர் சகோ. ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
மாநாட்டின் ஆரம்பம் முதலே கழக அடலேருகளின் கூட்டம் அரங்கத்தை நிரப்பியது. முதலாவதாக அமீரக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோ. நாசர் அலிகான் அவர்கள் சிறப்புரையாற்றினார் அவரைத் தொடர்ந்து அமீரகத் தலைவர் சகோ. அப்துல் ஹாதி அவர்கள் சிறப்புறையாற்றினார். அவர்களைத் தொடர்ந்து மாநாட்டின் முத்தாய்ப்பாக தாயகத்திலிருந்து வருகைத் தந்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் சகோ. சிவகாசி முஸ்தபா அவர்கள் “இஸ்லாம் கூறும் இறையச்சம்” என்ற தலைப்பிலே தனது உரைவீச்சை நிகழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் தனது உடல் நிலை சுகவீனமாயிருந்தாலும் தனது வழக்கமான பானியிலே தமிழகத்தின் தற்கால அரசியல் சூழ்நிலைகளையும், மனித நேய மக்கள் கட்சியின் தந்திரமிக்க அரசியல் நகர்வுகளையும் விளக்கி கூறினார். அதிமுக கூட்டணியுடன்சேறுவதற்கான அணுகூலங்களையும் மிக விவரமாக விளக்கினார். தமிழக முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ள சாதக, பாதக விடயங்களை விவரமாக தொகுத்து கூறினார். இறுதியாக தனது உரையின் முடிவில் கழக அடலேறுகளும், அனுதாபிகளும், பொது மக்களும் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தார்.
இறுதியாக ஷார்ஜா மண்டல துணைச் செயலாளர் சகோ. பந்தல்குடி சம்சுத்தின் அவர்கள் நன்றியுரை கூறி நிறைவு செய்யும் வேளையில் இப்தாரின் நேரமும் நெருங்கியது. வந்திருந்த அனைத்து மக்களுக்கும் நோன்புத் திறக்க அணைத்து வசதிகளையும் ஷார்ஜா மண்டல நிர்வாகிள் திரம்பட செய்திருந்தமை வந்தோரை வியப்படைய செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக