அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இறைவனின் கிருபையால் 30-8-2010 அன்று 5:00 மணியளவில் துபாய் அல்கூசில் உள்ள பட்சி சாக்லட் கேம்பில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான தமிழக முஸ்லிம் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.நிகழ்ச்சியை கேம்ப் பொறுப்பாளர் சகோதரர் கொள்ளுமேடு ஜாகிர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அவர்களும் மமகவின் துனைப்போதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களும் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள்.
சிவகாசி முஸ்தபா அவர்கள் ரமலான் தரும் பாடம் என்ற தலைப்பிலும் தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி அனைவரையும் உணர்வு பூர்வமாக சிந்திக்கவைத்தார்கள்.
மேலும் தமுமுக தமிழக முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்துவரும் பணிகளையும் நினைவுக் கூர்ந்தார்கள். கடந்த பாரளுமன்ற தேர்தலின்போது தமிழக ஆட்சியாளர்கள் கொள்கை சகோதரர்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களையும்,அதை கொள்கை சகோதரர்கள் எதிர்கொண்ட விதத்தையும் எடுத்துரைத்தது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட அனைவரும் இன்றைய சூழ்நிலையில் மமகவின் தேவையை விளங்கினார்கள்.
இப்தார் நிகழ்ச்சியோடு நிறைவுப் பெற இருந்த நிகழ்ச்சி சகோதர்களின் ஆர்வத்தினால் மக்ரிப் தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்தது எனபது குறிப்பிடத்தக்கது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக