அல்லாஹ்வின் உதவியால்
அஜ்மான் மண்டல முமுகவின் ஆலோசனைக் கூட்டம் 26-08-2010 அன்று அல்புத்தான் பகுதியில் முமுகவின் அமீரக துணைத் தலைவர் சகோதரர்ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மண்டல முமுக நிர்வாகிகள் முன்னிலை வகிக்க முமுகவின் ஷார்ஜா மண்டல துணை செயலாளர் சகோதரர் பந்தல்குடி சம்சுதீன் அவர்கள் தமுமுக
ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் உரைநிகழ்த்த அஜ்மான் மண்டல புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
தலைவர் :- குடவாசல் செய்யது ஷஹாபுதீன்
துணை தலைவர் : - முத்துப்பேட்டை முகைதீன்
செயலாளர் :- கட்டிமேடு ஜபருல்லாஹ்
துணை செயலாளர்கள் 2:-
பசுபதி கோவில் முகம்மது ரபீக்
கட்டிமேடு சாகுல் ஹமீது
பொருளாளர் :- திருச்சி முகம்மது இல்யாஸ்
மக்கள் தொடர்பு :- செய்யது ஜமால் (சித்தார் கோட்டை)
செயற்குழு உறுப்பினர்கள் :-
அஜீஸ் ரஹ்மான் - திருநெல்வேலி,களக்காடு
முகம்மது ஹனிபா - திருநெல்வேலி
மக்கள் உரிமை பொறுப்பாளராக சகோ.முத்துப்பேட்டை முகைதீன் ஆகியோர் ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வந்திருந்தோர் அனைவருக்கும் நோன்பு திறக்கும் ஏற்பாடு மண்டல நிர்வாகிகளால் செய்யபட்டு இருந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் 02-09-2010 வியாழன் அன்று தாயகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாய் அமீரகம் வந்திருக்கும் தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், மக்கள் உரிமை ஆசிரியரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான சகோதரர் M.தமீமுன் அன்சாரி MBA., அவர்களையும், தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சகோதரர் மவ்லவி சிவகாசி முஸ்தபா அவர்களையும் அழைத்து அஜ்மானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்வது என்று ஏக மானதாக முடிவு செய்யப்பட்டது.
கலந்துகொண்ட அணைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திதவர்களாக கலைந்து சென்றனர்.
செய்தி தொகுப்பு - முத்துப்பேட்டை முகைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக