டில்லியிலிருந்து புறப்பட்ட வைசாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஆறு ராணுவ வீரர்கள் அதிலிருந்த பெண் பயணிகளை கேலி செய்து, அவர்களிடம் தவறாக நடக்க முயன்றதால் அவர்களை ரயில்வே காவலர்கள் நேற்று கைது செய்தனர்.
டில்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட வைசாலி எக்ஸ்பிரஸ் ரயிலில், ராணுவ வீரர்கள் ஆறு பேர், முன்பதிவு செய்யப்படாத பொது வகுப்பு பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த பெண் பயணிகளை கேலி கிண்டல் செய்தும், அவர்களிடம் தகாத முறையிலும் நடக்கவும் முயன்றனர். இதை தட்டிக்கேட்ட மற்ற பயணிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தில், டில்லியை சேர்ந்த காவலர் ஒருவர் உட்பட சில பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து, ரயில்வே காவல்நிலைத்தில் பயணிகள் புகார் அளித்தனர். ராணுவ வீரர்கள் ஆறு பேரையும், காவல்துறையினர் கைது செய்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக