சுசீந்திரம் அருகே ஜெபக்கூடத்திற்குத் தீ வைத்ததாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ன்த 16 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுசீந்திரம் அருகே மணிக்கட்டிபொட்டல், சின்னணைந்தான்விளையைச் சேர்ந்தவர் பாஸ்டர் ஜெகன். இவர் அந்தப் பகுதியில் கிரேஸ் குட்நியூஸ் மிஷன் சபை என்ற ஜெபக்கூடத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி மாலையில் அந்தப் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கொலை மிரட்டல் விடுத்து சபையைத் தீ வைத்து எரித்துவிடுவதாக பாஸ்டர் ஜெகனிடம் எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்த நிலையில் 17ம் தேதி இரவு 8.30 மணியளவில் சபை தீயில் எரிந்துகொண்டிருப்பதாகவும், தீயணைப்பு வீரர்கள் அணைத்துகொண்டிருப்பதாகவும் கிடைத்த தகவலையடுத்து ஜெகன் அங்கு சென்று பார்த்துள்ளார். அதில் ஜெபக்கூடம் தீ பிடித்ததில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதற்கு காரணமான முத்துலிங்கம், அப்பாத்துரை, வேல்முருகன், செல்வராஜ் உள்ளிட்ட 16 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வழக்குபதிவு செய்யப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்,இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் தொண்டர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக