ஜாக்கண்ட் மாநிலத்தில் பணியில் மந்தமாக செயல்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து 4 நீதிபதிகளை கட்டாய ஓய்வில் செல்லுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில் அமைச்சரவைக்கூட்டம் , முதல்வர் அர்ஜூன் முண்டா தலைமையில் நடந்தது. இதில் அம்மாநில அமைச்சரவை செயலாளர் ஆதித்யாஸ்வரூப் கலந்து கொண்டு முதல்வரிடம் அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார்.
அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய 4 நீதிபதிகள், தங்களது பணியில் மந்தமாக செயல்பட்டதாகவும், சரியாக பணிக்கு வரமால் இருந்ததாகவும் பொதுமக்களிடம் இருந்து அடிக்கடி புகார் வந்ததாக தெரிவித்தார். இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டதில் உண்மை தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
இதன் படி ஜார்க்கண்ட் அரசு சட்டப்பணிகளின் விதி 74-ன்படி ஐகோர்ட் நீதிபதி தாமோதர் பிரசாத்,மற்றும் தும்கா, ராஞ்சி மாவட்ட நீதிபதிகள் உள்பட 4 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக