இறைவனின் கிருபையால்,2-9-2010 வியாழன் இரவு 10:30 மணியளவில் துபாய்" ஹோர் அல் அன்ஸ் "பகுதியில் உள்ள பொதக்குடி சகோதரர்களின் சந்திப்பு நடைப்பெற்றது, இந்நிகழ்வில் அமீரக முமுக தலைவர் சகோதரர் அதிரை அப்துல் ஹாதி, தாயகத்தில் இருந்து வருகைத் தந்துள்ள மனித நேய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள் .
நிகழ்வின் ஆரம்பமாக அப்துல் ஹாதி அவர்கள் இஸ்லாம் விரும்பாத பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,
தனது உரையில் அமீரகத்தில் வசிக்கும் தமிழக இளையர்கள் தங்களின் நேரத்தை வீணாக்கும் விதத்தையும், இதை தடுக்க
அமீரக முமுக செய்யும் சேவையையும் சுட்டிக்காட்டினார்கள், மேலும் தீய பண்புகளையுடைய மனிதர்களுக்கு நரகத்தில்
கிடைக்கும் தண்டனையை எடுத்துரைத்து நல்ல பண்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்கள்
சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக முஸ்லிம்களின் அரசியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,
தனது உரையில் கடந்தக் காலங்களில் தமிழகத்தில் முஸ்லிம்களின் எழுச்சியையும் , முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியை நயவஞ்சகர்கள் மோசடியின் மூலமாக தடுத்ததையும், இடைக்காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை எடுத்துரைத்து தற்போது மங்கிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சியாக மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் எழுச்சியை விவரித்து எழுச்சிமிகு உரையாற்றினார்கள், தாய்க் கழகமாம் தமுமுகவின் பணிகளையும் விவரித்தார்கள், திரளான சகோதர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்வின் முடிவில் ஹோர் அல் அன்ஸ் "பகுதியின் முமுக நிர்வாகிகள் கீழ் கண்ட தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்,
தலைவர்- வேதாளை ஜின்னாஹ் (055-4607602)
பொருளாளர் -பொதக்குடி ஜைனுதீன் (050-3480289)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக